டென்மார்க்கில் 21 மணிநேர நோன்பு! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 24

டென்மார்க்கில் 21 மணிநேர நோன்பு!

ஜுலை 24: டென்மார்க்கில் முஸ்லிம்கள் இவ்வாண்டு 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். உலகிலேயே அதிக மணிநேரம் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் ஆவர்.
அதேவேளையில் அர்ஜெண்டினாவில் வாழும் முஸ்லிம்கள் 9 மணிநேரமே நோன்பை நோற்கின்றார்கள். லத்தீன் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு என்பதால் இவர்களுக்கு உலகிலேயே குறைந்த அளவே நோன்பு நோற்றால் போதும். ஏனெனில் இங்கு பகல் குறைந்த நேரம் ஆகும்.
அதேவேளையில் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் சூழல் ஆச்சரியமானது. அங்கு 24 மணிநேரம் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயே நடக்கிறது. அங்கு 20 மணிநேரம் நோன்பு நோற்கவேண்டும் என அறிஞர்கள் ஃபத்வா வழங்கியுள்ளனர். சில காலங்களில் இரவு அதிகமாக வரும். அக்காலங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அம்மக்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here