ஜூன்.28:14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்களின் முடிவில், போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
போலந்து மற்றும் உக்ரை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இத்தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் டோனட்ஸ்க் நகரிலுள்ள டான்பாச் அரீனா மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் போர்ச்சுகல் அணி நடப்பு யூரோ சாம்பியன் மற்றும் நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயின் அணியுடன் மோதியது.
இப்போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணியினரும் ஆக்ரோஷமாக ஆடினர். குறிப்பாக போர்ச்சுகல் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சகவீரர்களான ஜோவோ பெரீரா, கோயண்ட்ராவோ, மௌடின்ஹோ ஆகியோர் ரொனால்டோவுக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்தனர்.
எனினும் ஸ்பெயின் வீரர்களும் சிறப்பாக ஆடியதால் போர்ச்சுகல் அணியினரால் எளிதாக கோல் அடிக்க இயலவில்லை. ஸ்பெயின் அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான இகர் காஸில்லஸ் சிறப்பாக செயல்பட்டு போர்ச்சுகல் வீரர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டார். இதனால் முதல் பாதியின் முடிவில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியும் துவக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்தது. ரொனால்டோவின் ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து ஆடிய ஸ்பெயின் வீரர்கள் அவை கோல் அடிக்க விடாமல் செய்தனர். விறுவிறுப்பாக ஆடிய இரு அணி வீரர்களும், ஒவ்வொரு நிமிடமும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு தரையில் விழுந்தனர். போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ தனக்கு கிடத்த ப்ரீ கிக் வாய்ப்புகளை தொடர்ந்து வீணடித்தார்.
90 நிமிடங்களின் முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படாததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் இரு அணியினராலும் கோல் அடிக்க இயலவில்லை. இம்முறை ஸ்பெயின் அணியினர் தங்களுக்கு கிடைத்த சில அருமையான வாய்ப்புகளை தவறவிட்டனர்.
இறுதியில் போட்டியின் முடிவை நிர்ணையிப்பதற்காக பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. முதலாவது பெனால்டி ஷூட் வாய்ப்பில் ஸ்பெயின் வீரர் சேவி கோல் அடிக்க தவறினார். அவரது முயற்சியை போர்ச்சுகல் கீப்பர் அருமையாக தடுத்தார். போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த முதலாவது வாய்ப்பை அந்த அணியும் தவறவிட்டது.
2-வது வாய்ப்பில் ஸ்பெயின் வீரர் கோல் அடித்தார். இம்முறை பதிலுக்கு போர்ச்சுகலும் கோல் அடித்தது. 3-வது வாய்ப்பில் ஸ்பெயின் மீண்டும் கோல் அடித்தது. இம்முறை போர்ச்சுகல் வீரர் நானி பதில் கோல் அடித்தார். 4-வது வாய்ப்பையும் ஸ்பெயின் வீரர் கோலாக மாற்றினார். பதிலுக்கு போர்ச்சுகல் அணியால் கோல் அடிக்க முடியாமல் போக ஸ்பெயின் 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
5-வது மற்றும் இறுதி வாய்ப்பில் ஸ்பெயின் மீண்டும் கோல் அடித்தது. இதனால் இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி யூரோ கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இது இரண்டாவது முறையாகும்.
நமது முத்துப்பேட்டை பிபிசி யி்ல் EURO CUP கால்பந்து போட்டி நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment