அகல இரயில் பாதை – ஜூலை 9 ல் போராட்டம் – MMJ அறிவிப்பு. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 28

அகல இரயில் பாதை – ஜூலை 9 ல் போராட்டம் – MMJ அறிவிப்பு.

அகல இரயில் பாதை – ஜூலை 9 ல் போராட்டம் – MMJ அறிவிப்பு
ஜுன் 28: முத்துப்பேட்டை தர்ஹா பரம்பரை முதன்மை அறங்காவலரும், M.M.J ஒருங்கிணைப்பாளரும், தர்ஹாக்கள் முன்னேற்றப்பேரவையின் நிறுவனருமாகிய ஜனாப் S.S. பாக்கர் அலி அவர்கள் ஊடகத்துறையினருக்கு அளித்த செய்திக்குறிப்பானது…

”முத்துப்பேட்டை – வழி காரைக்குடி அகல இரயில் பாதை வேண்டி பல போராட்டங்களை முத்துப்பேட்டை சுற்றியுள்ள அனைத்து ஊர்கள் சார்பிலும், அனைத்து கட்சிகள் சார்பிலும் நடத்தி விட்டோம். ஆனால் எதற்கும் செவி கேட்காமல் மத்திய இரயில்வே துறை உள்ளது. கிட்டத்தட்ட நாட்டில் உள்ள அனைத்து இரயில்வே வழித்தடங்களும் அகல இரயில் பாதையாக மாறிக்கொண்டு வருகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்கள் தனி தீவுப்போல் காட்சியளிக்கின்றன. இருக்கின்ற பாதையை மத்திய அரசு அகல பாதையாக மாற்றுவதற்கு ஏன்..இந்த தயக்கம்..என்ன பிரச்சனை.. தெரியவில்லை.”

மத்திய அரசின் இத்தகைய போக்கினை கண்டித்து வருகிற 9.7.12 திங்கட்கிழமை மதியம் 3 மணிக்கு திருச்சி இரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் முத்துப்பேட்டை அதன் சுற்றுப்புற ஊர் பொது மக்களும், அனைத்து கட்சியினரும், அனைத்து சங்கங்களும், அனைத்து இயக்கங்களும் திரளாக கலந்துக்கொண்டு முழு ஒத்துழைப்பினை தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த போராட்டத்திற்கு பின், எந்த விதமான பதிலும் வரவில்லையென்றால் ரமலான் மாதம் முடிந்த பின் ”சாகும் வரை உண்ணாவிரதம்” போராட்டத்தினை அறிவிக்க இருக்கிறோம் என்று மேலும் அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தகவல்: முத்துப்பேட்டை.org

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here