மே 06 : தமிழகத்தில், திருவாரூர்-காரைக்குடி இடையே மீட்டர்கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, விரைவில் துவங்கும்' என, ரயில்வே அமைச்சர் முகுல்ராய் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, எம்.பி.யான டி.ராஜா நேற்று, ராஜ்யசபாவில் கேள்வி நேரத்திற்குபின் பேசுகையில், ""திருவாரூர்-காரைக்குடி ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்படாமல் உள்ளது. இந்த ரயில் பாதை, பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் வழியாகவும், சுதந்திரப் போராட்ட இயக்கத்துடன் தொடர்புடைய பகுதிகள் வழியாகவும் செல்கிறது.
இந்த அகல ரயில் பாதை திட்டத்தை விரைவாக நிறைவேற்றக்கோரி, நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் நாளை (இன்று) போராட்டம் நடத்த உள்ளனர். எனவே, இந்த ரயில் பாதை திட்டத்தை விரைவில், ரயில்வே துறை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.
இதற்கு பதில் அளித்த, மத்திய ரயில்வே அமைச்சர் முகுல்ராய், "தமிழகத்தில், திருவாரூர்-காரைக்குடி இடையேயான மீட்டர் கேஜ் பாதையை அகற்றி, அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும்.
இந்த விவகாரத்தை அவசரகதியில் பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில்வே வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே, இந்த விவகாரத்தில் விரைவில் முடிவெடுக்கப்படும்,'' என்றார்.
நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்

No comments:
Post a Comment