மே 06: சென்னை – காரைக்குடி அகல இரயில் பாதை திட்டத்தின் பணிகள் திருவாரூர் வரை முடிந்த நிலையில் உள்ளது. ஆனால் சிலரின் சுயநலம் காரணத்தினால் அகல இரயில் பாதையின் பணியானது காரைக்குடி – பட்டுக்கோட்டை வரை பணிகள் துவங்கப்பட உள்ளது. இதனை கண்டித்தும் அகல இரயில் பாதையின் பணியினை திருவாரூர் – திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை – அதிராம்பட்டினம் காரைக்குடி வழியாக உள்ள பணியினை மிக விரைவில் துவங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி மே 5 ம் தேதி மாலை 4 மணியிலிருந்து 5 மணி வரை ஒரு லட்சம் மக்கள் பங்குகொண்ட மாபெரும் ”மனித சங்கிலி போராட்டம” திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து துவங்கி முத்துப்பேட்டை இரயில் நிலையம் வரை நடந்தது. இந்த தூரம் சுமார் 60 கிலோ மீட்டர் உள்ளதாகும்.
மனித சங்கிலி போராட்டத்தினை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஏற்பாடு செய்து இருந்தாலும் இப்போராட்டத்திற்கு அனைத்து பகுதி மக்கள், வர்த்தகப்பெருமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அரசியல் இயக்க தொண்டர்கள், தன்னார்வ தொண்டர்கள், பொது நலனில் அக்கறை கொண்ட அனைவரும் பெருந்திரளாக கலந்துக்கொண்டு முழு ஒத்துழைப்பினை தந்தார்கள்.
நன்றி: முத்துப்பேட்டை.org

No comments:
Post a Comment