மே 07: முத்துப்பேட்டை – ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் 12 ம் தேதி சனிக்கிழமை காலை 10 துவங்கி மாலை 5 மணி வரை நடைபெறக்கூடிய ”பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாட்டில்” சிறப்புச் சொற்பொழிவாளர்கள் பலர் உரை நிகழ்த்த உள்ளனர்.
நிகழ்ச்சி நிரல்:
முதல் அமர்வு : காலை 10 மணி முதல் பகல் 12.30 வரை
1. ”பெண் கல்வி எதற்காக?” என்ற தலைப்பில் டாக்டர். சுமையா தாவூத் M.sc., M.Phil., Ph.D – முதல்வர் – தாசிம்பீவி அப்துல் காதிர் மகளிர் கல்லூரி – கீழக்கரை அவர்களும்,
2. ”இல்லங்களில் இஸ்லாமிய ஒழுக்கம்” என்ற தலைப்பில் அஃப்ஸலுல் உலமா A. மெஹ்ராஜ் ஃபாத்திமா ஆலிமா சித்தீகிய்யா – ஜூம்மா சிந்தனைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் – சென்னை அவர்களும் உரையாற்ற உள்ளனர்.
இரண்டாம் அமர்வு : (லுஹர் தொழுகை மற்றும் உணவு இடைவேளைக்குப்பின்) பகல் 2.30 முதல் மாலை 5 மணி
3. A. சயீதா பானு – B.sc., B.Ed. தலைமை ஆசிரியை – இக்ரா நர்ஸரி பிரைமரி பள்ளி – காரைக்கால் அவர்கள் ”முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்" என்ற தலைப்பிலும்,
4. டாக்டர். பர்வீன் சுல்தானா M.A., Ph.D. – பேராசிரியை – ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி – சென்னை அவர்கள் ”குடும்பப் பொருளாதார நிர்வாகத்தில் முஸ்லிம் பெண்” என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் ஆண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர், காரைக்கால், தஞ்சை பகுதியினை சார்ந்த நம் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.
மாநாட்டு நிகழ்ச்சியின் நேரடி நிகழ்வுகளை www.muthupet.org இணையதளத்திலும் காணலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்ச்சியினை பற்றி மேலும் தொடர்புக்கு :
M.A முஸ்தபா
நிறுவனர் – சென்னை ரஹ்மத் அறக்கட்டளை
Mobile: +91 99400 67000, +65 9619 0125
E.mail : musthafa@agccapital.com.sg
நன்றி: முத்துப்பேட்டை.org

No comments:
Post a Comment