இலங்கையில் மஸ்ஜிதை இடிக்க கோரி புத்தமத வெறியர்கள் போராட்டம்! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 8

இலங்கையில் மஸ்ஜிதை இடிக்க கோரி புத்தமத வெறியர்கள் போராட்டம்!

Sri Lankan Buddhists protest mosque in Dambulla
மே 08: இலங்கையின் தம்புள்ளை நகரில் உள்ள முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான மஸ்ஜிதை இடிக்க கோரி புத்தமத வெறியர்கள் நேற்று(திங்கள் கிழமை) போராட்டம் நடத்தினர். மஸ்ஜிதை இடிக்கவேண்டும்! புத்த மதத்தை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இலங்கை தம்புள்ளை நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அமைந்துள்ள முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான மஸ்ஜிதை நகரின் இதர வழிப்பாட்டுத்தலங்களை அகற்றி தூய்மையாக்கப் போகிறோம் என கூறிக்கொண்டு வெறிப்பிடித்த புத்த பிக்குகள் மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இப்பிரச்சனை சர்வதேச அளவில் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இலங்கை முஸ்லிம்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கை பிரதமரோ புத்த பிக்குகளுக்கு ஆதரவாக பாரபட்சமான அறிக்கையை வெளியிட்டார்.

இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு தெற்கு இருக்கும் களுத்துறை பகுதியில் புத்த பிக்குகள் மஸ்ஜிதை இடிக்க கோரி ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

முஸ்லிம்களின் நெருக்குதலுக்கு பணிந்துவிடக் கூடாது என்றும், புத்தமதத்தை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அசோக மெனிக்கோடா என்ற புத்த பிக்கு வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here