மே 08: இந்தியாவில் இருந்து மக்காவுக்கு புனித யாத்திரை செல்லும் முஸ்லீம்களுக்கு கொடுக்கப்படும் ஹஜ் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஹஜ்ஜுக்கு செல்லும் பயணிகளுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செல்ல சலுகை கட்டணம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இம்மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அது போல் ஹஜ்ஜுக்கு செல்லும் பிரதமரின் நல்லெண்ண குழுவில் தற்போதுள்ளதை போல் நிறைய பேர் கொண்ட குழுவாக செல்ல கூடாது என்றும் அதிகபட்சமாக 2 நபர்கள் செல்லலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment