இந்தோனேஷியா அருகே விமான விபத்து - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 10

இந்தோனேஷியா அருகே விமான விபத்து

மே 10: இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம், இந்தோனேஷியாவின் ஜாவா தீவு அருகே விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 48 பேரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

போர் விமான தயாரிப்புக்கு பெயர் பெற்ற ரஷ்யாவின் சுக‌ோய் விமான நிறுவனம், தற்போது பயணிகளின் விமானத்தை தயாரித்து வருகிறது.

அந்நிறுவனத்தின், பயணிகள் விமானம் ஒன்று 48 பேர்களுடன், இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மேற்கு ஜாவாவின் போகோர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென விமான கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.

தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் விமானம் விபத்தக்குள்ளாகியிருப்பதை ரஷ்‌ய அதிகாரிகள் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டன. மீட்புக் குழுவை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here