எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் தாய் மொழியில் படிக்லாம் ஜி மெயிலின் புது வசதி! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, May 4

எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் தாய் மொழியில் படிக்லாம் ஜி மெயிலின் புது வசதி!

மே 04: ஆங்கிலம் சரியாக புரியவில்லை என்ற கவலை உங்களுக்கு இனி தேவையில்லை. இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு புரிந்த மொழியில் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை உங்களுக்கு கூகிள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் வழங்க உள்ளது.

ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். மின்னஞ்சலின் மேற்பகுதியில் இருக்கும் ‘டிரான்ஸலேட்’ என்கிற பொத்தானை இயக்குவதன் மூலம் தேவையான மொழிக்கு மின்னஞ்சலை மொழிபெயர்க்க முடியும் என்று கூகுள் ‘டிரான்ஸலேட்’ சேவையின் மேலாளர் ஜெஃப் சின் தெரிவித்தார்.

இந்தத் தகவல் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக கூகுளின் பரிசோதனை முயற்சிகள் இடம்பெறும் ‘லேப்ஸ்’ பகுதியில் வழங்கப்பட்டிருந்த தானியங்கி செய்தி மொழிமாற்ற சேவைக்கு ஜிமெயில் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், ஜிமெயிலிலும் இதைப் பயன்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here