(Updated News) காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்துப்பேட்டையின் தற்போதைய நிலவரம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 22

(Updated News) காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்துப்பேட்டையின் தற்போதைய நிலவரம்.





செப்டம்பர் 22: காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்துப்பேட்டையின் தற்போதைய நிலவரம்.
19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது. மதியம் 2 மணிக்கு துவங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரான் சோலை, ஜாம்புவானோடை தர்கா மேலக்காடு, கோரை ஆற்றுப்பாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத்நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம், நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல் வழியாக மாலை 6 மணிக்கு செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் கரைக்கப்படுகிறது. ஊர்வலத்தை முன்னிட்டு காவல் துறை, மாவட்ட வருவாய் துறை சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

மாலை 3.30 மணியளவில் செம்படவான்காடு இருந்து வந்த விநாயகர் சிலை பங்கலா வாசல் வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றது.

மற்ற சிலைகள்

மாலை 4.30 மணியளவில் ஜாம்புவானோடை வடக்காடு இருந்து ஆசாத் நகர் பாலம் அருகே வந்துக்கொண்டு இருக்கிறது.

மாலை 5.10 மணியளவில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தது.

மாலை 5.45 மணியளவில் பங்களாவாசல் வழியாக ஓடக்கரை மற்றும் ரஹமத் பள்ளியை கடந்து சென்று சென்றுவிட்டது.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள facebook  பக்கத்தை லைக் பண்ணுங்க..
https://www.facebook.com/muthupettaibbcnews

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here