செப்டம்பர் 15: முத்துப்பேட்டையில் இந்த வருடமும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தான் விநாயகர் சிலை ஊர்வளம் நடைபெறுகிறது.
இன்று (15-09-2015) மதியம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 22-09-2015இல் முத்துப்பேட்டையில் நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் சிலை ஊர்வளம் அமைதியாக நடைபெற உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அதிகாரிகள், முத்துப்பேட்டை ஜமாத்தார்கள், BJPயை சார்ந்த பொறுப்பாளிகள் கலந்து கொண்டு விவாதித்தனர்.
இறுதியாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பேசுகையில் 22-09-2015 இல் நடைபெற உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வளத்தை எந்த வித மாற்றமும் செய்யமல் இந்த ஆண்டும் தகுந்த பாதுகாப்போடு ஜாம்பவானோடை, தர்ஹா, ஆசாத்நகர், பாலம், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட், பட்டுக்கோட்டை சாலை, AM. பங்களா வாசல், ரஹ்மத் பெண்கள்மேல்நிலைப் பள்ளியில், பைபாஸ் சாலை, செம்படவன்காடு வழியில், பாமணி ஆற்றில் வினாயகர் சிலைகள், ஊர்வளம் நடைபெறும் என்றார். இந்த ஆண்டு கண்டிப்பாக மதியம் 2 மணியளவில் ஜாம்பவானோடை வடகாடு, சிவன் கோவிலில் இருந்து சரியாக எடுத்து செல்லப்படும். மாலை 6 மணிக்கு பாமணி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். திருவாரூர் BJP மாவட்ட தலைவர், பேட்டை சிவா பேசுகையில் நாங்கள் மதியம் 2-00 மணிக்கு புறப்பட்டு மாலை 6-00 மணிக்கு முடிவடையும் என்று கூறியுள்ளார். முத்துப்பேட்டை அனைத்து பள்ளிஜமாத்தார்கள், சார்பில் ஜனாப் G. பசீர் அகம்மது பேசுகையில் பேட்டை சிவா சொன்னது போல் பிரச்சினை இல்லாமல் அமைதியாக ஊர்வலம் நடைபெற்றால் அனைவரும் வரவேற்பு அளிக்கப்படும். கால தாமதம் இல்லாமல் 6 மணிக்கு முடிதல் நன்றாக இருக்கும் என்றார். இந்த முறையாவது வன்முறைகள் நிகழலாமல் இருந்தால் சரி தான். காவல் துறை அனைவருக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கும் என நம்புகின்றோம்.
தகவல் : KSH.சுல்தான் இபுராஹீம்,(சுனா இனா)



No comments:
Post a Comment