செப்டம்பர் 15: உயிரிழந்த ஹாஜிகளின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரியால் வழங்க சவூதி மன்னர் சல்மான் உத்தரவு!
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவில் விபத்தின் காரணமாக உயிரிழந்த ஹாஜிகளின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இரத்த பணமாக 3 லட்சம் ரியால் வழங்க வேண்டும் என்று சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி மன்னர் சல்மான் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு....
முஸ்லிம்களின் புனித ஆலயமான மக்காவில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் 110 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் உயிரிழந்தனர்.
உலகையே உலுக்கிய இந்த அதிர்ச்சி சம்பவத்தில் உயிரிழந்த ஹாஜிகளின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இரத்தபணமாக தலா 3 லட்சம் ரியால் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3 லட்சம் ரியால் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் 53 லட்சம் ரூபாய் ஆகும்.


No comments:
Post a Comment