செப்டமபர் 26: அன்புள்ள துபாய் வாழ் சகோதரர்களை துபாய் தேய்ரா பகுதியில் குறிப்பாக ஷப்க்கா ரோடு (அல் தாஜ் ஸ்டூடியோ மற்றும் மதினா சூப்பர் மார்க்கெட்) அருகில் பாகிஸ்தானிகள் நின்று கொண்டு அந்தவழியில் வரும் மக்களை நன்கு உற்று நோக்குவார்கள் நம்மிடம்என்ன குறைவுள்ளது என்பதை கவனிப்பார்காள் உதாரணத்திற்கு நீங்கள் கொஞ்சம் தொப்பையாக இருந்தால் உங்கள் தொப்பையை குறைக்க எளிய வழி உள்ளது என்றும், தலை முடி கழிந்த ஒருவர் வருகிறார் என்றால் அவரை பிடித்து கொள்ளவது இஅல்லது கரு வலையம் என்று சொல்லக்கூடிய கண்ணனை சுற்றி இருக்கும் கருப்பு நிற பிரச்சனை உள்ளவர்களாக இருந்தால் அவரை பிடித்து கொள்வது, அல்லது நமது நடையில் சிறு மாற்றம் இருக்கிறதா என்று உற்று கவனிப்பார்கள் இப்படி எதாவது ஒன்று நம்மிடம் தென் பட்டால் உடனே நம்மிடம் வந்து அழகிய முறையில் சலாம் சொல்லி நம்மிடம் நலம் விசாரித்த பிறகு உனக்கு இந்த பிரச்சனை உள்ளது.
உதாரணத்திற்கு உனக்கு தலைமுடி கழிந்து இருக்கு இதற்கு நல்ல மருந்து உள்ளது என்னுடன் வா வாங்கி தருகிறேன் எனக்கு பணம் எதுவும் வேண்டாம் நீ எனக்கு தொழுது துஆ செய்தால் போதும் என்று கூறுவார்கள் இந்த நல்ல வார்தைகளை நம்பி அவர்கள் பின்னால்ஏபோய்விட வேண்டாம். என்று அனுபவத்தில் எச்சரிக்கிறோம்.
ஆம் நீங்கள் அவர்கள் பின்னால் சென்றால் உங்களை ஒரு குரோசரிக்கு (கடைக்கு) அழைத்து செல்வார்கள் பிறகு அங்கு இருக்கும் லேகியம் அல்லது எதாவது பவுடர் எடுத்து இரண்டையும் நம் கண் முன்னே மிக்ஸ் செய்வார்கள் செய்துவிட்டு இதை சாபிடுங்க ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்று கூறுவார் அந்த பொருளுக்கு தொகையாக 100 அல்லது 150 திர்ஹம் வாக்கிவிடுவார்கள் இதை சாப்பிட்டல் நமக்கு இருக்கும் பிரச்சனை சரியாகுமா அல்லது பேதி போகுமா என்பது அவன் குடுக்கும் லேகியத்தை பொருத்து!
இப்படி செய்வதுனால் இவனுக்கு என்ன லாபம் என்று நீங்கள் நினைக்கலாம் அவனுக்கு கமிஷன் என்ற லாபம் கிடைக்கும் ஆம் இவர்கள் ஒரு நாளைக்கு எத்துனை கஷ்டம்பேரை அழைத்து செல்கிறார்லோ அதற்கு தகுந்தவாறு அந்த கடைகாரர் இவர்களுக்கு கமிஷன் வழங்குவார்கள்.
ஆகையால் அன்புள்ள நண்பர்களை இத்தகைய மோசடி பேர்வழிகளிடம் இருந்து உங்களை தற்காத்துத் கொள்ளுங்கள். இதுவரைக்கும் எனக்கு தெரிந்து நான்கு பேர் ஏமார்ந்து இருக்கிறார்கள். இதில் இரண்டு பேரு பொருள்களை வாங்கி ஏமார்ந்துள்ளார்கள் ஒருவர் 15 திர்ஹம் மட்டும் குடுத்துவிட்டு பொருள்வாங்கமல் இவர்களிடம் இருந்து தப்பிதால் போதும் என்று ஓடிவந்துள்ளார்.
இவர்கள் விரித்த வலையில் சிக்காமல் வந்தது நான் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பு நாங்கள் அனைவரும் வேறு வேறு நாள்களில் இந்த பிரச்சனையை சந்தித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது இன்று என் ரூம்பில் தற்செயலாக இந்த வலையில் சிக்கிய ஒருவர் தான் ஏமாந்த விசையத்தை ரூம்பில் கூறினார் பிறகுதான் தான் ஏமார்ந்த விசையத்தை அனைவரும் கூறினார்கள் நானும் இது போன்று ஏமார்துள்ளேன் என்று கூற ஒரே காமெடியா போச்சு
ஹ ஹ ஹ இதை ஆரம்பத்திலே யாராவது ஒருவர் கூறியிருந்தால் அனைவரும் சுதாரித்து இருந்துயிருப்பார்கள். அன்புள்ள நண்பர்களை இதை பிறருக்கு ஷேர் பன்னுங்க பிற மொழி பேசும் நணபர்களுக்கும் தெரியபடுத்துங்க.
தகவல்: வீக்களத்தூர்.இன்


No comments:
Post a Comment