ஜுலை 17: உலக முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது
அந்த வகையில் சவூதி, துபாயில், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இதனை அடுத்து அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் முத்துப்பேட்டை நண்பர்கள் ஒன்று கூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களுக்கு முத்துப்பேட்டை.org மற்றும் முத்துப்பேட்டை பிபிசியின் சார்பாக நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
குறிப்பு: வெளிநாடுகளில் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடும் முத்துப்பேட்டை சகோதரர்கள் தங்கள் புகைப்படங்களை பதிய விரும்பினால் –00971554623134 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பவும் அல்லது muthupettaibbc@gmail.com அனுப்பலாம்.
மேலும் புகைப்படங்கள் விரைவில்.....
























No comments:
Post a Comment