முத்துப்பேட்டை செக்கடிகுளம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கண்டித்து சாலைமறியல். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, July 13

முத்துப்பேட்டை செக்கடிகுளம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கண்டித்து சாலைமறியல்.














ஜுலை 13: முத்துப்பேட்டையை  சேர்ந்த சமூக ஆர்வலர் முகமது மாலிக், சென்னை உயர் நீதி மன்ற வழி காட்டுதலின்படி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று டிஆர்ஓ, ஆர் டிஓ, தாசில்தார் ஆகியோருக்கு  மனு  அனுப்பினார். இதையடுத்து செக்கடி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அளந்து கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து குளத்தை ஆக்கிரமித்துள்ள 40 ஆக்கிரமிப்பாளர்கள் பேரூராட்சி கவுன்சிலர் தலைமையில் கையெழுத்திட்டு தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினர். அதில், அன்றாடம் பிழைப்பு நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக குடிசை வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். வீடுகளுக்கு சொத்து வரி, மின் கட்டணம் செலுத்தி வருகிறோம்.
எங்களது குடியிருப்புகளை காலி செய்வதற்காக  வருவாய்  துறையினர் இடத்தை  அளந்துள்ளனர். நாங்கள்  இப்பகுதியில் குடியிருப்பதால் போக்குவரத்துக்கோ, பொது பணித்துறைக்கோ  எந்த இடையூறும் இல்லை. அதனால் எங்கள் குடியிருப்புகளுக்கு எந்த  இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி மீறி எங்கள் குடியிருப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் திருவாரூர் கலெக்டர் அலுவலகம்  முன்பு நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து  கொள்வதை தவிர  வேறு வழி இல்லை என்று  குறிப்பிட்டு இருந்தனர்.

இன்னும் 10 நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இருப்பதாக பேரூராட்சி நிர்வாகம் கெடுவிடுத்து இருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவ மாணவிகள் பள்ளிக்கூடம் செல்லாமல் புறக்கணித்து மாற்று இடம் கோரி சாலை மறியல் நடத்தினர். செக்கடி குளம் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கண்டித்து இன்று காலை 11 மணி அளவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நகர தலைவர் மாலிக், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் தமீம் அன்சாரி, எஸ்டிபிஐ கட்சியின் நகர துணை தலைவர் காதர் முகைதீன் மற்றும் ஆர்பாட்டக்காரர்கள் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here