முத்துப்பேட்டை அருகே சுடுக்காட்டில் தூக்கில் தொங்கிய இளைஞர். கொலையா? தற்கொலையா? - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 4

முத்துப்பேட்டை அருகே சுடுக்காட்டில் தூக்கில் தொங்கிய இளைஞர். கொலையா? தற்கொலையா?


ஜுன் 04: முத்துப்பேட்டை அருகே சுடுக்காட்டில் தூக்கில் தொங்கிய இளைஞர். கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.
முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் வாலிபர் ஒருவர் சுடுகாட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது. 
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ஏரிப்புக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் பிராபாகரன். இவருக்கும் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு மலையாகணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கணபதி மகள் மாரியாயி என்பவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் 6 வயதில் சுதாகர், சுரேஷ் ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர். அன்றைய முதல் பிரபாகரன் மாமனார் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்தார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பாத பிராபாகரன், நேற்று காலை அதே பகுதியில் உள்ள சுடுக்காட்டில் தூக்கில் தொங்கினார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண், சப்-இன்ஸ்பெக்டர் நதியா அ10கியோர் சென்று தூக்கில் தொங்கிய பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த நிலையில் பிராபகரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என்ற கோணத்தில் முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.

தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here