முத்துப்பேட்டையில் வேண்டுமென்றே ரமலான் மாதத்தில் அடிக்கடி மின்தடை மின்சார வாரியம் மீது குற்றச்சாட்டு. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 28

முத்துப்பேட்டையில் வேண்டுமென்றே ரமலான் மாதத்தில் அடிக்கடி மின்தடை மின்சார வாரியம் மீது குற்றச்சாட்டு.

TNEB_1266168g
ஜுன் 28: முத்துப்பேட்டையில் வேண்டுமென்றே ரமலான் மாதத்தில் அடிக்கடி மின்தடை மின்சார வாரியம் மீது குற்றச்சாட்டு.
முத்துப்பேட்டையில் சமீப காலமாக அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 10 முதல் 20 முறை வரை மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களும் வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் மின்சார கம்பிகள் பராமரிக்கப்படாததால் ஒன்றோடு ஒன்று உரசி அப்பகுதிகளில் கூடுதலாக மின் அழுத்தம் ஏற்பட்டு பலரது வீடுகளில் உள்ள மின்சாரப் பொருட்கள் புகைந்து வீணாகி வருகிறது. சமீபத்தில் கோவிலூர் கிராமத்தில் ஏற்பட்ட மின் அழுத்தத்தின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட டி.விகள் மற்றும் மின்சாரப் பொருட்கள் மேலும் ஊராட்சி மன்ற தெருவிளக்குகள் வீணாகியது. இதனால் முத்துப்பேட்டை மின்சார வாரிய செயல்பாடுகள் மீது பொதுமக்கள் அதிர்ப்தி அடைந்துள்ளனர். 
இந்த நிலையில் கடந்த மே 10-ம் தேதி முத்துப்பேட்டை த.மு.மு.க சார்பில் மின்சார வாரியத்திடம் ரமலான் மாதம் துவங்க இருப்பதால் அந்த மாதத்தில் குறிப்பாக நோன்பு பிடிக்கும் மற்றும் திறக்கும் நேரங்களில் மின்தடை ஏற்படுத்தாமல் தவிர்க்க வேண்டும் என்று மனு ஒன்று கொடுத்தனர். அதன் பின்னர் த.மு.மு.கவின் கோரிக்கைக்கு மாறாக கடந்த கடந்த ஜுன் 19-ந் தேதி ரமலான் நோன்பு துவங்கிய நாளிலிருந்து அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் நோன்பு பிடிக்கும் மற்றும் திறக்கும் நேரங்களிலும் தொழுகை நேரங்களிலும் மின்சார தடை ஏற்பட்டு வருவதால் பெருமளவில் இஸ்லாமியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
இது குறித்து மின்சார வாரியத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தார் அதிகாரிகள் பொறுபற்ற பதிலை தெரிவிப்பதாக கூறுகின்றனர். மேலும் சிலர் மின்சாரத்தை பத்திரிக்கையாளர்களிடம் கேளுங்கள் என்று மின்சார அதிகாரிகள் தெரிவிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவு மாநில நிர்வாகி ஹாஜா(படம்) கூறுகையில்: ரமலான் மாதத்தில் மின்தடை ஏற்படுத்த கூடாது என்று ஒரு இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை வைத்தது. ஆனால் அதற்காகவே மின்சார வாரியம் திட்டமிட்டு செய்வது போல் ரமலான் நோன்பு முக்கிய நேரங்களில் மின்சார வாரியம் மின்தடையை ஏற்படுத்தி வருகிறது. 
முத்துப்பேட்டை தவிர்த்து பல இடங்களிலும் மின்தடை ஏற்படுவதில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் வசிக்கும் முத்துப்பேட்டை நகரில் மட்டும்தான் மின் தடையை மின்சார வாரியம் ஏற்படுத்தி வருகிறது. இதனை வண்மையாக கண்டிக்கிறோம். உடனே மின்சாரவாரியத்தின் தவறான எண்ணத்தை கை விட்டுவிட்டு மின்தடை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றார். இது குறித்து முகம்மது மாலிக் கூறுகையில்: தமிழக முதல்வர் தமிழகத்தில் தடையில்லா மின்வாரம் விழங்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் முத்துப்பேட்டை நகரில் மட்டும் ஒரு நாளைக்கு 20 முறை மின்தடை ஏற்படுகிறது. அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்களிடம் முறையான பதிலை பெற முடியவில்லை என்றார். 
இது குறித்து திருத்துறைப்பூண்டி மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் அழகேசன் கூறுகையில்: சமீபத்தில் பலமான காற்றுகள் வீசுவதால், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அடுத்த மாதம் காற்று குறைந்து விடும். அப்பொழுது மின்தடை இருக்காது. ரமலான் மாதத்தில் வேண்டுமென்றே நாங்கள் மின்தடை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here