செக்கடிக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தீ குளிப்போம் ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டல். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 28

செக்கடிக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தீ குளிப்போம் ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டல்.





ஜுன் 28: முத்துப்பேட்டை முகம்மது மாலிக் கடந்த ஆண்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டரைக்குளத்தில் நடந்த முறைக்கேடான பணிகளை எதிர்த்தும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து உயர்நீதி மன்றம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைக்கேடாக நடந்த பணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி சென்ற மாதம் குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் மற்றும் பள்ளி வாசல்கள் உட்பட ஏராளமான குடியிருப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்ற வழிக்காட்டுதலின் படி சில மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று முகம்மது மாலிக் தாசில்தார், வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தார். அதன் நடவடிக்கையாக செக்கடி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் சமீபத்தில் அளந்து கண்டறிந்துள்ளனர். அதன்படி விரைவில் ஆக்கிரமிப்புகள் முழுவதையும் அகற்ற பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குளத்தை ஆக்கிரமித்துள்ள 40 ஆக்கிரமிப்பாளர்கள் அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் ஜெகபருல்லா தலைமையில் கையெழுத்திட்டு தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளனர். அதில் அன்றாட பிழைப்பு நடத்தி குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறோம். மேற்கண்ட பகுதியில் பல ஆண்டுகளாக குடிசை வீடு கட்டி குடியிருந்து வருகிறோம. எங்கள் வீடுகளுக்கு வரி, சொத்து வரி, மின் கட்டணம் போன்றவைகள் செலுத்தி வருகிறோம். எங்களது குடியிருப்புகளை காலி செய்யச் சொல்லி வருவாய் துறையினர் சமீபத்தில் இடத்தை அளவை செய்தனர். எங்களுக்கு எந்த வித சொத்துகளும் கிடையாது. எங்களது குழந்தைகள் இப்பகுதியில் படித்து வருகின்றனர். நாங்கள் இப்பகுதியில் குடியிருப்பதால் போக்கு வரத்துக்கோ, பொது பணித்துறைக்கோ எந்த ஒரு இடையூறும் இல்லை. அதனால் எங்கள் குடியிருப்புகளுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி மீறி எங்கள் குடியிருப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் தீ குளித்து தற்கொலை செய்துக் கொள்வதை தவிர வேறு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இது போன்ற கடிதங்களின் நகழ்கள் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாச்சியர், தாசில்தார் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளனர். இதனால் அதிகாரிகள் தரப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here