ஜுன் 23: நோன்பு வைத்திருந்த மாணவிகளை கட்டாயபடுத்தி நிலவேம்பு கசாயம் குடிக்க வைத்த பள்ளி நிர்வாகம்!
திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதி எடத்தெருவில் உள்ள அதிகமாக முஸ்லிம்கள் படிக்கக்கூடிய ஹோலி ரெடிமர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று (22-06-2015) முஸ்லிம் பெண்கள் நோன்பு வைத்திருந்த நிலையில் நிலவேம்பு கசாயம் கட்டாயமாக குடிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தி குடிக்க வைத்திருக்கின்றது அந்த பள்ளி நிர்வாகம்.
நாங்கள் நோன்பு வைத்திருகின்றோம் நாங்கள் எதுவும் குடிக்க கூடாது என்று அந்த பள்ளி மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் கூறியும் கூட கேட்காமல் அந்த பள்ளி நிர்வாகம் முஸ்லிம் மாணவிகளை கட்டாய படுத்தி நிலவேம்பு கசாயத்தை வாயில் ஊற்றி உள்ளனர்.
இதனை அந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெருவித்தனர். இதனை அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள், திருச்சி ஜமாத்துல் உலமா சபை, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மற்றும் இதர அமைப்புகள் அந்த பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதனை அறிந்த CEO உடனடியாக அந்த பள்ளிக்கு வந்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார்.
பின்னர் ரமலான் மாதங்களில் திருச்சியில் உள்ள எந்த பள்ளிகூடதிலும் இது போன்ற செயல்பாடுகள் நடைபெறாது என்று CEO வாக்குறுதி கூறினார்.
இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இதியாவின் திருச்சி மாவட்ட செயலாளர் V. முஜீபுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
http://popularfronttn.org/







No comments:
Post a Comment