புனித ரமலானுக்காக துபாய் போக்குவரத்து சேவை நேர மாற்றங்கள் ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 18

புனித ரமலானுக்காக துபாய் போக்குவரத்து சேவை நேர மாற்றங்கள் !


ஜுன் 18: சேவை நேர மாற்றங்களை "சாலை மற்றும் போக்குவரத்துத் துறை"யான துபை RTA புனிதமிகு ரமலானுக்காக கீழ்க்காணும் வகையில் மாற்றியமைத்துள்ளது. 

துபை மெட்ரோ

ரெட் லைன்:
சனி முதல் புதன் வரை அதிகாலை 5.30 (AM) முதல் நள்ளிரவு 12.00 (AM) வரை இயங்கும்.

வியாழன் தோறும் அதிகாலை 5.30 (AM) மணிமுதல் நள்ளிரவு 1 (AM) வரை இயங்கும்.

வெள்ளிக்கிழமை பகல் 1 (PM) மணிமுதல் நள்ளிரவு 1 (AM) மணிவரை இயங்கும்.

கிரீன் லைன்:
சனி முதல் புதன் வரை அதிகாலை 5.50 (AM) முதல் நள்ளிரவு 12.00 (AM) வரை இயங்கும்.

வியாழன் தோறும் அதிகாலை 5.50 (AM) மணிமுதல் நள்ளிரவு 1 (AM) வரை இயங்கும்.

வெள்ளிக்கிழமை பகல் 1 (PM) மணிமுதல் நள்ளிரவு 1 (AM) மணிவரை இயங்கும்.

துபை டிராம்
சனி முதல் வியாழன் வரை அதிகாலை 6.30 (AM) முதல் நள்ளிரவு 01.30 (AM) வரை இயங்கும்.

வெள்ளிக்கிழமை காலை 9 (AM) மணிமுதல் நள்ளிரவு 01.30 (AM) மணிவரை இயங்கும்.

கட்டண நிறுத்தங்கள்: (Paid parking)

சனி முதல் வியாழன் வரை காலை 8.00 (AM) முதல் பகல் 01.00 (PM) வரையும் மீண்டும் மாலை 7 (PM) மணிமுதல் இரவு 12 (AM) மணிவரை.

மீன் மார்க்கெட் ஏரியா நிறுத்தங்கள் (CODE E):
வாரம் முழுவதும் காலை 8 மணிமுதல் பகல் 1 வரையும் மீண்டும் மாலை 4 மணிமுதல் இரவு 11 மணிவரை.

டீகோம் மற்றும் நாலேட்ஜ் வில்லேஜ் நிறுத்தங்கள் (CODE F):
சனி முதல் வியாழன் வரை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை.

அடுக்கு மாடி கட்டிட நிறுத்தங்கள் (Multi Level Parking) வழமைபோல் 24 மணிநேரமும் கட்டணத்திற்குரியது.

பேருந்து சேவை விபரங்கள்

கோல்டு சூக் மற்றும் அல் குபைபா (பர்துபை) பஸ் நிலையங்கள் அதிகாலை 5 (AM) மணிமுதல் நள்ளிரவு 12 (AM) மணிவரை இயங்கும்.

அல் கிஸஸ், சத்வா, அல்கோஸ் இன்டஸ்டிரியல், ஜெபல் அலி பஸ் நிலையங்கள் அதிகாலை 5.40 (AM) மணிமுதல் இரவு 10.30 (PM) மணிவரை இயங்கும்.

ஏனைய அனைத்து பஸ் நிலையங்களும் அதிகாலை 5 (AM) மணிமுதல் நள்ளிரவு 12.30 (AM) வரை இயங்கும்.

தடம் எண் C01 பேருந்து மட்டும் 24 மணிநேரமும் இயங்கும்.

மெட்ரோ இணைப்பு பஸ் நிலையங்களான ராஷிதியா, மால் ஆஃப் தி எமிரேட்ஸ், இப்னு பதூதா, புருஜ் கலீஃபா-துபை மால், அபுஹைல், எடிசலாட் நிலையங்கள் சனி முதல் புதன் வரை அதிகாலை 5.15 (AM) மணிமுதல் நள்ளிரவு 12.30 (AM) வரையிலும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை5.15 (AM) மணிமுதல் நள்ளிரவு 1.10 (AM) வரையும் இயங்கும்.

பெரிய நகரங்களுக்கு பஸ் சேவை:(Inter-city bus services)

அல் குபைபா (பர்துபை) பஸ் நிலையத்திலிருந்து 24 மணி நேரமும் இயங்கும்.

யூனியன் ஸ்கொயர் மற்றும் சப்கா பஸ் நிலையங்களிலிருந்து அதிகாலை 5.30 (AM) மணிமுதல் நள்ளிரவு 12.00 (AM) வரை இயங்கும்.

தேரா சிட்டி சென்டர் மற்றும் கராமா பஸ் நிலையங்களிலிருந்து அதிகாலை 6.10 (AM) முதல் இரவு 10.15 (PM) வரை இயங்கும்.

ஷார்ஜா (ஜூபைல்) பஸ் நிலயத்திலிருந்து துபைக்கு 24 மணிநேரமும் இயக்கப்படும்.

அபுதாபி பஸ் நிலையத்திலிருந்து துபைக்கு அதிகாலை 5 (AM) மணிமுதல் நள்ளிரவு 12.30 (AM) வரை இயங்கும்.

ஃபுஜைரா பஸ் நிலையத்திலிருந்து துபைக்கு அதிகாலை 5.55 (AM) மணிமுதல் இரவு 9.30 (PM) வரை இயங்கும்.

அஜ்மான் பஸ் நிலையத்திலிருந்து துபைக்கு அதிகாலை 6 (AM) மணிமுதல் இரவு 10 (PM) மணிவரை இயங்கும்.

ஹத்தா பஸ் நிலையத்திலிருந்து துபைக்கு அதிகாலை 5.30 (AM) மணிமுதல் இரவு 9.30 (PM) மணிவரை இயங்கும்.

நீர்வழி போக்குவரத்துக்கள்
வாட்டர் பஸ்:

துபை கிரீக் மற்றும் மரீனா நிலையங்களுக்கிடையே சனி முதல் வியாழன் வரை பகல் 12 (PM) மணிமுதல் நள்ளிரவு 12 (AM) மணிவரை இயங்கும். 

வெள்ளி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பகல் 2 (PM) மணிமுதல் நள்ளிரவு 1 (AM) மணிவரை இயங்கும்.

வாட்டர் டேக்ஸி

மரீனா நிலையத்திலிருந்து பகல் 2 (PM) முதல் இரவு 10 (PM) மணிவரையும்,
அல் குபைபா (பர்துபை) நிலையத்திலிருந்து மாலை 4 (PM) மணிமுதல் இரவு 10 (PM) மணிவரையும், பாம் (Palm) ஏரியா நிலையத்திலிருந்து மாலை 4 (PM) மணிமுதல் இரவு 10 (PM) மணிவரையும் இயங்கும்.

துபை பெர்ரி: (Dubai Ferry)

அல் குபைபா (பர்துபை) நிலையத்திலிருந்து மரீனா நிலையத்திற்கு காலை 11 (AM) மணிமுதல் மாலை 6.30 (PM) வரை இயங்கும். அதேபோல் மறுமார்க்கத்தில் மரீனாவிலிருந்து அல் குபைபாவிற்கும் காலை 11 (AM) மணிமுதல் மாலை 6.30 (PM) வரை இயங்கும்.

மரீனா நிலையத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்காக மாலை 5 (PM) மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு சிறப்பு சேவை இயங்கும்.

அப்ரா சேவை: (Abra Service)

புர்ஜ் கலீஃபா-துபை மால் சேவை இரவு 8 (PM) மணிமுதல் இரவு 11 (PM) மணிவரையும், அல் மம்ஸரிலிருந்து இரவு 8 (PM) மணிமுதல் இரவு 2 (AM) மணிவரையும், அட்லாண்டிஸிலிருந்து பகல் 1 (PM) மணிமுதல் இரவு 9 (PM) மணிவரையும் இயங்கும்.

வாகன சோதனை மற்றும் பதிவு மையங்கள்

சனி முதல் வியாழன் வரை காலை 9 (AM) மணிமுதல் பகல் 3 (PM) மணி வரையிலும் மீண்டும் இரவு 9 (PM) மணிமுதல் நள்ளிரவு 12 (AM) மணிவரையிலும் இயங்கும்.

துரித சோதனை மையம்: (Quick Testing Centre) 
காலை 8 (AM) மணிமுதல் மாலை 5 (PM) மணி வரையிலும் மீண்டும் இரவு 9 (PM) மணிமுதல் அதிகாலை 3.30 (AM) மணிவரையிலும் இயங்கும்.

ஷிராவி சோதனை மையம்: (Shirawi Testing Centre) 
காலை 9 (AM) மணிமுதல் மாலை 6 (PM) மணி வரையிலும் இயங்கும்.

வாடிக்கையாளர் சேவை மையங்கள்: (Customer service centres)

உம் அல் ரமூல், பர்ஷா, தேரா மற்றும் கராமா மையங்கள் காலை 9 (AM) மணிமுதல் பகல் 2 (PM) மணிவரையிலும்,

தவார், மனாரா, அவீர் மையங்கள் காலை 9 (AM) மணிமுதல் மாலை 5 (PM) மணி வரையிலும்,

ஜூமைரா (JBR) மையம் காலை 10 (AM) மணிமுதல் மாலை 3 (PM) மணிவரையிலும் இயங்கும்

என துபை RTA நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

msm.com உதவியுடன் தொகுப்பு:
அதிரை அமீன்
மற்றும் 
அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here