ஜுன் 01: முத்துப்பேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என உலகநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி விவசாய தொழிலாளர்களை அதிகம் கொண்ட பகுதி ஆகும். இங்கு நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் பல உள்ளன. அவற்றை இந்த ஆட்சி காலத்துக்குள் நிறைவேற்ற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனி தாலுகா
முத்துப்பேட்டையை தலைமை இடமாக கொண்ட ஒரு தனி தாலுகாவை அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டூர் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டவும், திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஆகிய இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல திருவாரூர் சாலையையும் நாகப்பட்டினம் சாலையையும் இணைக்கும் புறவழிச்சாலை பணிகளை உடனே தொடங்கவும், பழமையான கட்டிடத்தில் இயங்கி வரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment