முத்துப்பேட்டையில் அனுமதி இல்லாமல் பொது கூட்டம் நடத்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை 37 பேர் கைது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, June 1

முத்துப்பேட்டையில் அனுமதி இல்லாமல் பொது கூட்டம் நடத்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை 37 பேர் கைது.


ஜுன் 01: முத்துப்பேட்டையில் அனுமதி இல்லாமல் பொது கூட்டம் நடத்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை 37 பேர் கைது.
முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் சார்பில் பெரிய கடைத் தெரு முகைதீன் பள்ளி வாசல் திடலில் நேற்று முன்தினம் 30-ம் தேதி இரவு ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் நடத்த கடந்த 10 தினங்களுக்கு முன்பு அமைப்பின் சார்பில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது. இதற்கு பதில் ஏதும் கூறாமல் போலீசார் இருந்தனர். 
இந்த நிலையில் முகைதீன் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் கூட்டம் நடத்த கூடாதென்று காவல் நிலையத்தில் அதன் தலைவர் முகம்மது ராவுத்தர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் 2 தினங்களுக்கு முன்பு கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் நோட்டீஸ் கொடுத்தனர். இதனை வாங்க அவர்கள் மறுத்ததால் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வீட்டு வாசலில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொது கூட்டம் தடை செய்யப்பட்டதற்கான தகவலை நோட்டீசாக ஒட்டினர். இதனை கண்டு அசராத தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கூட்டம் ஏற்பாடுகளை பெரியளவில் செய்து கொண்டிருந்தனர். மீண்டும் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் போசியும் பலனில்லை. 
திட்டமிட்டப்படி தவ்ஹீத் ஜமாதினர் நேற்று முன்தினம் இரவு மிகப்பிரம்மாண்டமாக பொதுகூட்டத்தை நடத்தினர். இதில் தஞ்சை, நாகை, திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட தவ்ஹுத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண், பெண் கலந்துக் கொண்டனர். இதனையடுத்து முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண், திருவாரூர் டி.எஸ்.பி.அன்பழகன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாhதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து நடந்த பொது கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபி உட்பட ஏராளமானோர் பேசினர். கூட்டம் சரியாக 10 மணிக்கு முடிந்ததும் எல்லோரும் புறப்பட்டு சென்றனர். 
இந்த நிலையில் முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நதியா சாலையை மறைத்து பொது கூட்டம் நடத்தியதாகவும், போக்கு வரத்துக்கு இடையூராக வாகனங்களை நிறுத்தியதாகவும், அதே போல் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் குமார். அனுமதி இல்;லாமல் பொது கூட்டம் நடத்தியதாகவும், அதே போல் அதே பகுதியை சேர்ந்த சேர்தாவூது தனது வீட்டு வாசலில் பொது கூட்டம் மேடை அமைத்து இடையூறு செய்ததாகவும் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் முத்துப்பேட்;டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பொது கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றனர். அங்கே பொது கூட்ட ஏற்பாடுகள் செய்தவர்கள் மட்டும் மேடை அருகே பொருட்களையெல்லாம் சேகரித்து அடுக்கி வைக்கும் பணயில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 
இதில் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் அப்துல் மாலிக், முன்னால் தலைவர் அன்சாரி, கிளை செயலாளர் புகாரி, நிர்வாகிகள் சாகுல் ஹமீது, செய்யது, முகம்மது அலி, கருத்தப்பா சித்திக், ஜாகிர் உசேன், முகம்மது அலி ஜின்னா, தாஜுதீன், நஜீமுதீன், முகம்மது அமீர் கான். சாதிக் பாட்சா, தஸ்லீம், ஹாஜா மைதீன், சலீம், நிஜாம் அலி, சுல்தான், முகம்மது யூசுப், சின்ன மரைக்காயா,; ஆசிக் மற்றும் மைக் செட் அமைத்த மாதவன், மாசி, சுதாகர், சரண்ராஜ் உட்பட 37 பேரை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். 
பின்னர் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த பொது கூட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பைக் செட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து மேலும் பலரை தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதால் நகர் முழுவதம் ஏராளமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சாவூர் எஸ்.பி. தர்மராஜ் முத்துப்பேட்டையில் முகாமிட்டு பாதுகாப்பு பணி குறித்து அதிகாரிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தினார்.

தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here