துபாய் மற்றும் அமீரகத்தில் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை தந்தவர் அன்பின் வள்ளல் டாக்டர் பி.எஸ் அப்துல் ரஹ்மான். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, June 8

துபாய் மற்றும் அமீரகத்தில் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை தந்தவர் அன்பின் வள்ளல் டாக்டர் பி.எஸ் அப்துல் ரஹ்மான்.





ஜுன் 08: 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை தந்தவர் பிஎஸ்ஏ !துபாய் புத்தக வெளியீட்டில் புகழாரம்.
2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை தந்தவர் பிஎஸ்ஏ !துபாயில் புத்தக வெளியீட்டில் புகழாரம் மறைந்த கீழக்கரை பி எஸ் அப்துர் ரஹ்மான் வாழ்க்கை குறிப்புகளை தொகுத்து  ' அன்பின் வள்ளல் அப்துர் ரஹ்மான் ' என்ற புத்தகம் துபாயில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  செய்யது அஹமது முத்து ஆலிம் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். ஈமான் கல்ச்சுரல் சென்ட்ரல் தலைவர், அரேபியா ஹோல்டிங் குரூப் வைஸ் சேர்மன் & நிர்வாக மேலாளர் பி.எஸ்.எம் ஹபீபுல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். செய்யது அப்துல் காதர் தலைமை வகித்து நூல் ஆசிரியர்கள் திருச்சி செய்யது மற்றும் கீழக்கரை இம்தியாஸ் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியை ஈமான் துணை பொது செயலாளர் தாஹா தொகுத்து வழங்கினார்.

பின்னர் முதல் பிரதியை ஹபீபுல்லாஹ் வெளியிட உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்க தலைவர் இன்ஞ்னியர் செய்யது அப்துல் காதர், நரம்பீயல் டாக்டர் சீனிவாசன், பி.எஸ்.ஏ.ஆரிப் புஹாரி, செய்யது புஹாரி, எம்.எம்.முஹைனுதீன், இத்ரீஸ், வெஸ்டர்ன் ஆட்டோ கமால், ஆபித் ஜீனைத் உள்ளிட்டோர் பிரதிகளை பெற்று கொண்டனர்.
இஞ்சினியர் செய்யது அப்துல் காதர், எம் எம் முஹைனுதீன், ஆரிப் ரஹ்மான் புஹாரி, நூலாசிரியர் இம்தியாஸ், சொற்பொழிவாளர் கீழை மஹ்ரூப் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

சிறப்பு அழைப்பாளர் நரம்பியல் நிபுணர் டாக்டர் சீனிவாசன் சிறப்புரையாற்றி நோய் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
இப்புத்தகத்தை இலவசமாக அச்சிட்டு வெளியிட ஏற்பாடு செய்த‌ ஈமான் கல்ச்சுரல் சென்டர் தலைவர் ஹபீபுல்லா மற்றும் சமுதாய புரவலர் அக்பர்கான் ஆகியோருக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மற்றும் புரவலர் அக்பர்கான் மகன் சுஹைல் அக்பர்கானுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இப்புத்தகத்தை எழுதி வடிவமைத்த கீழக்கரை இம்தியாஸ் மற்றும் திருச்சி செய்யது ஆகியோருக்கும் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஈமான் தலைவர் பிஎஸ் எம் ஹபீபுல்லா பேசும் போது சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை பெற்று தந்துள்ளார். அவரின் நிறுவனத்தில் பணியாற்றிய என்னை போன்ற சொந்தக்காரர்களை நிறுவனத்தின் பங்குதாராக்கினார் என்பவை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் சலீம் அன்சாரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஈமான கல்ச்சுரல் சென்டர் சார்பில் விழாக்குழு செயலாளர் ஹமீது யாசின், கல்விக்குழு செயலாளர் ரசாக், ஈவெண்ட் செயலாளர் சாதிக் நிர்வாக துணை செயலாளர் யாகூப், ஆடிட்டர் அக்பர் பாஷா, கூத்தாநல்லூர் ஹிதாயத்துல்லாஹ், எஸ் கே வி சேக், நிர்வாக செயலாளர் காதர், மூன் மீடியா ஹிதாயத்துல்லாஹ்  மற்றும் அமீரக காயிதேமில்லத் பேரவை பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், மக்கள் தொடர்பு செயலாளர் அன்சாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here