மே 21: இன்று பகல் 2.30 மணியளவில் பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை வழியாக வேளாங்கன்னி செல்லக்கூடிய பஸ் வந்து கொண்டிருந்தது.மேலாறு பாலம் கடந்து பெட்ரோல் பங்க் அருகே வரும்போது ஒரு வாகனத்தை முந்தி செல்ல பஸ் டிரைவர் முயன்றார். அந்த சமயத்தில் ஒரு குடிமகன் அதிக போதையில் சைக்கிளில் குறுக்கே வர அவரை காப்பாற்ற முயன்ற டிரைவர் பிரேக்கை அழுத்தினார். இருந்தும் அவரையும் மீறி கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகே இருந்த பஸ் நிறுத்தத்தில் மோதி நின்றது.
நல்ல வேளையாக பஸ் டிரைவர் குதித்ததால் காயமின்றி தப்பினார். குடிமகன் தலையில் அடிபட்டதால் உடனடியாக அவரை மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
படங்கள்…அ. அர்ஷாத் அஹமது & அப்துல் பாரி.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:
Post a Comment