மே 21: மாநில மற்றும் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்று ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை.
இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நமது ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் இரண்டாமிடம் பெற்றுள்ளது.
இந்த வருட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 104 மாணவிகளில் 490 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 475 மதிப்பெண்களுக்கு மேல் 20 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 33 மாணவிகளும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
முதல் மூன்றிடம் பெற்ற மாணவிகள் பெயர் விவரம்,
1. A. ஜெயஸ்ரீ - 498
2. S. பிரியா - 495
3. M. மதுபாக்கியா - 493
குறிப்பாக 9 மாணவிகள் கணிதத்திலும், 20 மாணவிகள் அறிவியல் பாடத்திலும், 17 மாணவிகள் சமூக அறிவியல் பாடத்திலும், ஆங்கிலத்தில் ஒரு மாணவியும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்...
இச்சாதனையை சாதகமாக்க கடின உழைப்பு செய்த அம்மாணவிகள், அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் முத்துப்பேட்டை இணையதளம் (www.muthupet.org) மற்றும் முத்துப்பேட்டை பிபிசி (www.muthupettaibbc.com) சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறாம்.


No comments:
Post a Comment