2016 - தேர்தலில் இஸ்லாமியர் ஒருவருக்கு தமிழக முதல்வர் பதவியை வழங்க வேண்டும்! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 2

2016 - தேர்தலில் இஸ்லாமியர் ஒருவருக்கு தமிழக முதல்வர் பதவியை வழங்க வேண்டும்!


மே 02: தமிழக தர்ஹாக்கள் முன்னேற்ற பேரவையின் மாநில நிர்வனத் தலைவர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப், தி.மு.க தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சி.பி.ஐ.மாநில செயலாளர் முத்தரசன், சி.பி.எம். மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பா.ம.க தலைவர் ராமதாஸ் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பாதவது: தமிழகத்தில் 2016-ல் நிறைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக சிறுபாண்மை சமூகமான ஒரு இஸ்லாமியருக்கு தமிழக முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று தர்ஹாக்கள் முன்னேற்ற பேரவையின் சார்பாக தாங்களுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

இந்த தமிழகம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும், கண்ணியமிக்க காயிதே மில்லத்தையும் பெற்றெடுத்த ஒரு புனித பூமி. இங்கே ஓர் சிறுபான்மை இஸ்லாமியருக்கு ஒரு முதல்வர் பதவியை ஒருமுறை வழங்குவதன் மூலம் சிறுபான்மை மக்களை வெறும் வாக்கு வங்கிக்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்ற வாதம் பொய்யாக்கப்பட்டு, சிறுபான்மையான முஸ்லிம்களுக்கும் அதிகாரம் வழங்குகிறோம் என்ற ஒரு நிலை ஏற்பட்டு சிறுபான்மை மக்களின் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு, சமநிலை அடையும் என்ற ஒரு நம்பிக்கை எங்களுக்கு ஏற்படும். எங்கள் கோரிக்கையை தாங்கள் பரிசீலிக்கும் பட்சத்தில் தமிழக தர்ஹாக்கள் முன்னேற்றப் பேரவையின் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வருகின்ற தேர்தலில் தாங்கள் வெற்றிக்காக முழு மூச்சுடன் செயல்படுவார்கள். நாங்கள் பாடுபடுவோம், வெற்றி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். அது மட்டுமல்லாமல் தர்ஹாவின் அபிமானிகளையும் அணுகி இந்த வெற்றியை நாங்கள் உறுதி செய்வோம். எத்தனையோ நல்ல விஷயங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக திகழ்ந்த காலம் உண்டு. அதேபோல இந்த நல்ல முயற்சிக்கும் தமிழகம் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும். பெரும்பான்மை மக்களின் அரவனைப்பில் ஒரு சிறுபான்மையினரான இஸ்லாமிய முதல்வர் என்ற இந்த தத்துவம் தாங்களினால் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. இவ்வாறு தர்ஹாக்கள் முன்னேற்ற பேரவை மாநில நிறுவனத் தலைவர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here