ஏப்ரல் 25: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். காங்கிரஸ் விவசாய பிரிவு கோரிக்கை
முத்துப்பேட்டை அடுத்த குன்னலூரில் மாவட்ட காங்கிரஸ் விவசாயபிரிவு கூட்டம், மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. வட்டார பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வர்த்தக பிரிவு தலைவர் வடுகநாதன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருத்துறைப்பூண்டி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் நாச்சிகுளம் தாஹிர் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து குளம், குட்டை, ஆறு கள் மற்றும் பாசன வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிதூர்வார வேண்டும். இடும்பாவனம் மரைக்காகோரையாற்றில் உள்ள பழுதடைந்த ரெகுலேட்டரை சீரமைக்க வேண்டும். வெட்டாறு பாசன வடி வாய்க்கால் தூர்ந்துபோய் உள்ளது. அதை முழுமையாக தூர் வார வேண்டும். இடும்பாவனம், மாரைக்காகோரையாறு, தில்லைவிளாகம் கிளந்தாங்கி ஆற்றில் கலக்கும் இறால் பண்ணைகளின் கழிவுகளை தடுத்து நிறுத் திடவேண்டும். தில்லைவிளாகம் பாசன பம்ப்செட்டு கூடாரத்தில் பழுத டைந்த மோட்டார் களை சீரமைத்து பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பட்டரைக் கு ளம் ஆக்கிரமிப்புகளை அகற்றியது போல், முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட 29 பஞ்சாயத்துகளிலும் ஆக்கிரமிக்கப் பட்ட குளங்களை வருவாய்துறை கணக்கீடு செய்து அதனை மீட்டு இப்பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நகர பொறுப்பாளர் ஜெகபர் அலி, வட்டார நிர்வாகிகள் எக்கல் இளவரசன், குன்னலூர் பக்கிரி சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment