ஏப்ரல் 23: முத்துப்பேட்டை ஆசாத் நகரை சேர்ந்தவர் நைனா முகமது. இவரது மகன்கள் ஜாகீர் உசேன், சேக் அப்துல்லா. இவர்கள் 2 பேருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சேக் அப்துல்லா வெளிநாடு சென்று விட்டார்.
அவரது மனைவி ஆயிஷா பீவி தனது கணவரின் அண்ணனிடம் சென்று சொத்தை பிரித்து தருமாறு கேட்டார். அப்போது ஜாகீர் உசேன் ஆபாச வார்த்தைகளால் திட்டி ஆயிஷா பீவியை அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை தனது தம்பியிடம் கூறினார். அவர் இதனை தட்டிக் கேட்டார். ஆத்திரம் அடைந்த ஜாகீர் உசேன் அவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாகீர் உசேனை கைது செய்தனர்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்


No comments:
Post a Comment