பட்டரைகுளத்தில் ஆகிரமிப்பு நடந்ததாக கூறி பள்ளிவாசல்கள், கோவில் சுவர் இடிப்பு. படங்கள் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 16

பட்டரைகுளத்தில் ஆகிரமிப்பு நடந்ததாக கூறி பள்ளிவாசல்கள், கோவில் சுவர் இடிப்பு. படங்கள்









ஏப்ரல் 15: முத்துப்பேட்டை பட்டரைகுளத்தில் ஆகிரமிப்பு நடந்ததாக கூறி பள்ளிவாசல்கள், கோவில் மற்றும் வீட்டின் சுவர்கள் இடிக்கப்பட்டதால் முத்துப்பேட்டை நகரம் பதற்றமான சூழ்நிலையே நிலவியது.
முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் மிகப்பெரிய பரபரப்பளவில் உள்ள பட்டரைக்குளம் தற்பொழுது சுற்றுபுறமும் உள்ள ஆக்கிரமிப்பால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

குளத்தின் கரையோரம் பேரூராட்சியின் துப்புரவு பணியாளர் சுமார் 25 குடும்பங்கள் 50 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார்கள். இங்கே இவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு மின்சாரம், தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உள்பட அனைத்தும் பேரூராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்ற ஆண்டு பட்டரை குளத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக குளத்தை ஆக்கிரமித்து பேரூராட்சி நிர்வாகம் ரூபாய் 27 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து தடுப்பு சுவர் கட்ட பணியை தொடங்கியது.

இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பேரூராட்சி நிர்வாகம் பணியை நிறுத்தாமல் கட்டி முடித்தது. இதனை எதிர்த்து முத்துப்பேட்டை சார்ந்த முகம்மது மாலிக் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முறைகேடாக குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பு சுவரையும், சுற்றுபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் பலமுறை கால அவகாசம் பெறப்பட்டது. அதன் பின்னர் சென்ற மாதம் மீண்டும் வருகிற ஏப்ரல் 23–ந்தேதிக்குள் ஆக்கிரமிப்பு முழுவதையும் பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பேரூராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தியது.

முத்துப்பேட்டை ஆண்டிக்குளம் பகுதியில் ஆலடி பள்ளிவாசல் என அனைவராலும் அழைக்கப்படுகிற மதினா பள்ளிவாசல் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் கட்டப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியினரால் புனரமைக்கப்பட்டு தினந்தோறும் அப்பகுதியினரால் தொழுகை நடத்தபட்டு வருகிறது. இங்கு தினமும் சிறுவர் சிறுமிகளுக்கு இஸ்லாமிய மார்க்க கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியில் மதினா பள்ளிவாசல் இருப்பதாக கூறி போலீசார் பாதுகாப்போடு ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு ஆக்கிரமிப்பை அகற்றும் பணி இன்று தீவிரமாக நடைபெற்றது. இதில் பள்ளிவாசலின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது. பள்ளி கண்முன்னே இடிபடுவதை அப்பகுதியினர் வேதனையுடன் பார்வையிட்டனர். இந்த பகுதியில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டையில் பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்று ஆலடிப் பள்ளி. தற்போது மதினா பள்ளி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 100 வருடம் பழமை வாய்ந்த இப்பள்ளி, 30 ஆண்டுகளுக்கு முன் புதுபிக்கப் பட்டது. இதில் ஐந்து வேலை தொழுகையும், "தீனியாத்", மார்க்க கல்வியும், ரமலான் மாதத்தில் பெண்களுக்கு தனி தொழுகையும் நடைபெற்றுக் கொண்டு இருந்து.இந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வர்த்தகம் படகில் நடந்து வந்து. கிட்டங்கி (குடோன்)னும், இருந்து வர்த்ததம் நடை பெற்றுக் கொண்டு இருந்தது.

இதை , தற்போது ஆக்கிறமிப்பு என்ற போரில் இடிக்கப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதி பரபரப்பாக உள்ளது. காவல் துறையினர்களும் உடன் நில அளவையர்களும். வருவாய்துறை அதிகாரிகளும் உடன் இடிப்பு வேலை நடை பெற்றது.

மேலும் புகைப்படங்களுக்கு
www.facebook.com/yesabdulhameed

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here