மரண அறிவிப்பு!(பிரபல இஸ்லாமியப் பாடகர் நாகூர் ஹனீஃபா) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 8

மரண அறிவிப்பு!(பிரபல இஸ்லாமியப் பாடகர் நாகூர் ஹனீஃபா)


ஏப்ரல் 08: மரண அறிவிப்பு!(பிரபல இஸ்லாமியப் பாடகர் நாகூர் ஹனீஃபா)

நாகூர் ஹனீஃபா (வயது90)  அவர்கள் இரவு 8.30 மணியளவில் சென்னையில் வபாத் ஆகிவிட்டர்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

நாகூர் ஹனீஃபா தமிழக அரசியல்வாதி மற்றும் பிரபல இஸ்லாமியப் பாடகரும் ஆவார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிதார் .நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூரில் பிறந்தார். இவர் அம்மாவுக்கு இராமநாதபுரம். இவர் பாட்டனார் (அம்மாவின் அப்பா) முத்து ராவுத்தர் இராமநாதபுரம் அரண்மனையில் ஆயுதக் கிடங்கு பாதுகாவலர் – பராமரிப்பாளராகப் பணியாற்றினார்.

இவரது 11-ஆம் வயதில் பள்ளிக்கூடத்தில் பாடினார். 13-ஆம் வயதில் திருமண வீடுகளில் பாடினார். 15-ஆம் வயதில் பக்க வாத்தியங்களுடன் மேடைக்கச்சேரி செய்துள்ளார்.1941-ஆம் ஆண்டு தேரழுந்தூரில் ஒரு திருமணத்தில் பாட இவரை அழைத்தார்கள். பக்க வாத்தியங்களுடன் இவரது முதல் மேடைக் கச்சேரி, அதுதான். அப்போது இவருக்கு 15 வயது. இவரது முதல் வெளியூர் கச்சேரியும் அதுதான். இவர் பணம் வாங்கிக் கொண்டு செய்த முதல் கச்சேரியும் அதுதான். 25 ரூபாய் கொடுத்தார்கள். அதில் ஏழெட்டு ரூபாய் பக்க வாத்தியக்காரர்களுக்கு போய்விட்டது. அன்றுமுதல் கடந்த 65 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்டத் திருமண வீடுகளில் பாடியுள்ளார்.

1957-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாகப்பட்டிணம் (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்துகிறவர் என்றில்லாமல் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டங்களில் சிறை புகுந்தவர். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here