மார்ச் 28: முத்துப்பேட்டை அருகே கார் கவிழ்ந்து கணவன் மனைவி குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!
முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட 5பேர் காயம் அடைந்தனர்.
சென்னையை சேர்ந்த வீரசேகரன் தனது மனைவி பானு. தனது குழந்தைகள் சஸ்வந்திகா, நிவேதா, அகல்யா ஆகியோர் குடும்பத்துடன் தங்களது காரில் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டு மனை போடும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்திருந்தனர், இந்தநிலையில் நேற்று காலை நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சென்னை செல்வதற்காக அதே காரில் தம்பிக்கோட்டையிலிருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை வழியாக திருத்துறைப்பூண்டி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆலங்காடு பாலம் கடந்து உப்பூர் அருகே சென்ற கார் திடீரென்று நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பொழுது அந்த வழியாக காரில் சென்ற முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெங்கடேசன் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு முத்துப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுக்குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளன.
தகவல் : நிருபர் மு.முகைதீன் பிச்சை


No comments:
Post a Comment