மார்ச் 10: சிங்கப்பூரில் முத்துப்பேட்டை அசோசியேசன் நடத்தும் குடும்ப தின விழா அழைப்பிதழ்.
இன்ஷா அல்லாஹ் வரும் (14-03-2015) சனிக்கிழமை மதியம் பகல் 12 மணியளவில் சிங்கப்பூரில் முத்துப்பேட்டை அசோசியேசன் தலைவர் M.A.Y ஜாகிர் ஹுசைன் (M.A யாக்கூப் அவர்களின் மகனார்) அவர்கள் மற்றும் செயலாளர் V.A.H.D சபீர் அஹமது (V.A.H துல்கர்னை அவர்களின் மகனார்) மற்றும் பொருளாளர் முகம்மது நூருல் அமீன் (நமது ஊர் சங்கத்து கல்விகூடத்தில் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற தொப்பி சார் அவர்களின் மகனார்) இவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
சிங்கப்பூரில் முத்துப்பேட்டை அசோசியேசன் நடத்தும் குடும்ப தின விழா மதிய உணவுக்கு பின்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. பின்னர் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டி மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாலை 5 மணியளவில் நடைபெறும். இரவு சிற்றூண்டி உணவு என்று பல அம்சங்கள் உள்ளன. முக்கியமாக நமது ஊர் மக்கள் சிங்கப்பூரில் ஒருவொருகொருவர் குடும்பத்துடன் தொடர்பு இல்லாமல் இருப்பதை தொடர்பு ஏற்படுத்தவும், நமது ஊர்மக்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் ஏற்படவும் இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி நல்ல சந்தர்ப்பமாக இருக்கும் என்றும், இதுபோன்று ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்க உள்ளதாக சங்க தலைவர் M.A.Y ஜாகிர் உசேன் அவர்கள் கூறினார்கள்.
தகவல்: சிங்கப்பூரில் முத்துப்பேட்டை அசோசியேசன்



No comments:
Post a Comment