மார்ச் 15: சிங்கப்பூரில் முத்துப்பேட்டை அசோசியேஷன் நடத்திய குடும்பதின ஒன்றுகூடல் நிகழ்ச்சி புகைப்படங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்....வரஹ்.
நமது முத்துப்பேட்டை அசோசியேஷன் சிங்கப்பூரின் அழைப்பினையேற்று 14.03.2015 சனிக்கிழமை முற்பகல் செந்தோசா சிலாசோ கடற்கரையில் குடும்பதின ஒன்றுகூடல் நிகழ்வு சுமார் 75 நபர்களுக்கு மேலாக குடும்ப சகிதமாய் கலந்து கொண்டு சிறப்பாக நடந்தது.
ஒன்று கூடலின் ஆரம்பமாக லுஹர் தொழுகையை கடற்காற்றுச் சூழலுடன் முடித்துக்கொண்டு, நமது ஊர் வரலாற்று சிறப்புமிக்க 5 கறி உணவு பகிந்து அளிக்கப்பட்டது. அதேசமயம் தாயகத்திலிருந்து சிங்கைக்கு வருகை தந்திருந்த முத்துப்பேட்டை அசோசியேஷன் சிங்கப்பூர் துவக்க கால (1959) சமயத்தில் பங்களித்த ஜனாப். முஹம்மது துல்கர்னை அவர்களும், நமதூர் ராயல் பர்னிச்சர் உரிமையாளர் ஜனாப். இமாம்தீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும், இந்த ஒருங்கிணைப்பு கலந்துரையாடலில் மூத்த உறுப்பினர் Dr.S.தமீம்தீன் நமது இந்த அசோசியேஷன் ஆரம்பத்தில் அதிகாரபூர்வ அங்கீகாரம் கடந்த1999 ல் செய்யப்பட்டது, அன்று முதல் இன்று வரை நமது அசோசியேஷன் எதிர் கொண்ட சவால்களும், அதனை சமாளிக்க எடுத்துக் கொண்ட விதத்தை நினைவு கூர்ந்தார். மேலும் இதுபோன்ற சவால்கள் வந்தால் எவ்வாறு எளிதாக செயல்பட வேண்டும் என்பதை கலந்துகொண்ட செயற்குழு, மற்றும் உறுப்பினர்களிடம் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார். அதேசமயம் இந்த குடும்பதின ஒன்று கூடல் நிகழ்வுக்கு மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்ட தலைவர் M.A.ஜாஹிர் உசேன், செயலாலர் D. சபீர் அஹமது, பொருளாலர் முகம்மது நூருல் அமீன், துனை தலைவர் தமீம் நசீர் ஆகியோரின் செயலையும், அவர்களுடன் இணைந்து செயல்பட்ட இதர செயல் வீரர்களையும் பெரிதும் பாராட்டினார்.
இது போன்ற நிகழ்வுகளை நாம் அடிக்கடி செய்யா விட்டாலும், குறைந்த பட்சம் 3 மாதமொரு முறையாவது செயற்குழு கூடி விவாதித்து, வருட மொருமுறை சிறப்பான முறையில் சிங்கையின் முக்கிய பிரமுகரை நமது அசோசியேசன் சார்பாக அழைத்து சிறப்பிக்க, அதற்கான ஏற்பாட்டை இப்போதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் இதனை எதிர்வரும் ஈதுப் பெருநாளுக்குப் பிறகு வியக்க தக்க வகையில் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி இன்று கூடிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் கலந்து கொள்ள தவறிய இதர குடும்பங்களையும் கலந்து கொள்ள உற்சாகப் படுத்தவேண்டும் என்று செயற்குழு மற்றும் உறுப்பினர்களுக்கும் தலைவர் MAY ஜாகிர் உசேன் கூரினார்.
இறுதியாக கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு ஓவியம் வண்ணம் தீட்டுதல், குறுக்கெழுத்துப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்தும், பரிசுகளும், கலந்து கொண்ட இதர சிறுவர், சிறுமியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியாக சிற்றுண்டி, தேனீருடன் மாலைப்பொழுது மலைச்சாரலுடன் இனிமையான இனிய நினைவுகளுடன் இன்றைய இந்த குடும்பதின ஒன்று கூடல் நிகழ்வு ஒரு நிறைவை அடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
























No comments:
Post a Comment