மார்ச் 23: திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளரா முத்துப்பேட்டை நிருபர் முகைதீன் பிச்சை நியமணம். அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை.நாராயணன் அறிவிப்பு.
முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் மு.முகைதீன் பிச்சை. இவர் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரை திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் பரிந்துறையின் பேரில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக மு.முகைதீன் பிச்சையை அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் நியமணம் செய்தார். இந்த நிலையில் நேற்று திருவாரூரில் நடந்த நிகழ்ச்சியில் முகைதீன் பிச்சையை அறிமுகம் செய்து வைத்து அமெரிக்கை.நாராயணன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்பொழுது திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், பொதுச் செயலாளர் அன்பு வே.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பையன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனை அடுத்து திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நியமணம் செய்யப்பட்ட மு.முகைதீன் பிச்சைக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முத்துப்பேட்டை.org மற்றும் முத்துப்பேட்டை பிபிசி இணையதளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
முத்துப்பேட்டை.org மற்றும் முத்துப்பேட்டை பிபிசி இணையதளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
படம் செய்தி:
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நியமணம் செய்யப்பட்ட மு.முகைதீன் பிச்சையை அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிமுகம் செய்து சால்வை அணிவித்து வாழ்த்து தொவித்தார். அருகில் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், பொதுச் செயலாளர் அன்பு வே.வீரமணி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பையன் ஆகியோர் உள்ளனர்.



No comments:
Post a Comment