முத்துப்பேட்டைகாவல் நிலையத்தில்DSP கணபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டேன் !!!
முத்துப்பேட்டை, செப்டம்பர் 07: எனது மருமகன் தவ்சீத் அஹமது (வயது 17.) இவர் இன்று காலை முத்துப்பேட்டை ராமஜெயம் திருமண மண்டபம் வழியாக தனது வீட்டிற்கு சென்றுள்ளார் .அப்போது இவரை பிடித்து விசாரித்த காவல்துறை அதிகாரிகள் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் .அதே போல் PKS ராஷித்( வயது 14).மற்றும் KT குலாம் முஹம்மது
(வயது 65) ஆகிய மூவரையும் விசாரிக்க வேண்டும் என கூறி இன்று காலை சுமார் 10 மணியளவில் போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர் .இச்செய்தியை அறிந்த நான் சற்றுமுன் காவல்நிலையம் சென்று வந்தேன் .அப்போது காவல்நிலையத்தில் இருந்த DSP கணபதி அவர்களிடம் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட காரணம் குறித்து கேள்விஎழுப்பினேன்.
அபோது என்னிடம் பேசிய அவர் நேற்று இரவு ராமஜெயம் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள போலீஸ்காரர் ஒருவரை சுமார் 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ,தாக்குதலில் போலீஸ்காரருக்கு வயிற்று மற்றும் தலை பகுதிகளில் பலத்த காயம் ஏற்ப்பட்டு உள்ளதாகவும் ,அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார் .அப்பது காவலர் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த நான் ,குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்க படவேண்டும் என்பதில் எங்களுக்கு இருவேறு கருத்துக்கள் இல்லை என்றும் ,அதேவேளையில் விசாரணை என்ற பெயரில் அப்பாவி சிறுவர்கள் மற்றும் முதியோரை அழைத்து வந்து சட்டவிரோத காவலில்( லாக் அப்பில் ) வைப்பது சட்டப்படி குற்றம் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் .
அதேபோல் அந்த காவலர் ராஜசேகரன் மீதும் பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது என்றும் ,அவர் மீது குற்றம் ஏதும் இருக்குமேயானால் காவலர் ராஜசேகரன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன்.
பிடித்து வைத்திருக்கும் எனது மருமகன் தவ்சீத் அஹமது உட்பட அப்பாவிகளை விரைவாக விடுவிக்க வில்லை என்றால் மிகபெரிய அளவில் பெண்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்து விட்டு வந்தேன் .
தகவல்
சேக்பரீத்
முத்துப்பேட்டை எக்பிரஸ் ஆசிரியர்.
தகவல்
சேக்பரீத்
முத்துப்பேட்டை எக்பிரஸ் ஆசிரியர்.


No comments:
Post a Comment