முத்துப்பேட்டையில் எனது கடையை மீண்டும் திறக்க இஸ்லாமியர்கள் உதவி செய்ய வேண்டும் --பெட்டிக்கடை மணி வேண்டுகோள் !!! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 9

முத்துப்பேட்டையில் எனது கடையை மீண்டும் திறக்க இஸ்லாமியர்கள் உதவி செய்ய வேண்டும் --பெட்டிக்கடை மணி வேண்டுகோள் !!!


முத்துப்பேட்டை கொய்யா மஹால் அருகே பெட்டிக்கடை வைத்திருப்பவர் மணி .சமீபத்தில் இவருக்கு சொந்தமான பெட்டிக்கடையை யாரோ சில மர்ம ஆசாமிகள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர் .இதனால் கடைக்குள் இருந்த அத்துனை பொருட்களும் தீயில் கருகி நாசமாயின .இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான மணி செய்வதறியாது திகைத்து நிற்கிறார் .பாதிக்கப்பட்ட மணியை பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதலை கூறி வருகின்றனர் .

இந்நிலையில் தீயில் கருகிய பொருட்களை மதிப்பீடு செய்வதற்காக நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் .காம் இணையதளத்தின் சார்பாக கொய்யா மஹால் அருகே இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றோம் .
பின்னர் நம்மிடம் பேசிய மணி ,நான் மீண்டும் எனது பெட்

டி கடையை திறக்க முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கேன் பாய் ,இப்போ என்கிட்டே அறவே பணம் இல்லே பாய் , என்றார் .உடனே குறுக்கிட்ட நாம் ,உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை படுகிறது என்றோம் .

அதற்கு பதிலளித்த அவர் எனக்கு சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் தேவைப்படுது பாய் என்றார் .பின்னர்  பேசிய அவர் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் உங்களது இஸ்லாமிய சகோதரர்களிடம் சொல்லி எனக்கு பண உதவி செய்ய சொல்லுங்க பாய் என்று கண்ணீர் மல்க நம்மிடம் வேண்டுகோள் விடுத்தார் .

மணி என்பவர் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் என்பதாலும் ,அவர் பிறவியில் ஊனமாக இருப்பதாலும் ,இதை எல்லாம் காட்டிலும் மணி ஒரு சிறந்த மதநல்லிணக்க வாதி என்பதாலும் இதனை படிக்கும் எமது இஸ்லாமிய சொந்தங்களே ,நமது  தொப்புள் கொடி உறவான ஒரு இந்து சகோதரனுக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்து அவரின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இன்றே உதவி செய்து நாளை மறுமை வெற்றியாளர்களாக தங்களை ஆக்கி கொள்ளுங்கள் என்று அன்போடு வேண்டுகிறோம் .நீங்கள் இன்று செய்யும் உதவி ,நாளை அவரை இஸ்லாத்தின் பால் இணைக்க கூடும் என்றும் தெரிவித்து கொள்கிறோம் .

மணியை நீங்களே நேரடியாக தொடர்பு கொண்டு உதவிகளை செய்யலாம் :

மணி :அலைபேசி -9698548943

தகவல்: ஜே .ஷேக் பரீத் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here