செப்டம்பர் 20: முத்துபேட்டை அருகே உள்ள செம்பளவன்காடு ரெயில்வே கேட் பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் விஜயரத்தினம். இவரது மனைவி மோகனா (வயது 35). அவரது கடை எதிரே பெட்டி கடை வைத்திருப்பவர் கணேசன். இவருக்கும் மோகனாவுக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த கணவர் விஜயரத்தினம், மகன் ராஜா, பாலமுருகன், மைத்துனர் ஜெயபால் ஆகிய 4 பேரும் கணேசனிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன், விஜயரத்தினம் வந்த கார் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த 4 பேரும் கணேசன், அவரது அப்பா அழகர், அம்மா மீனாட்சி, உறவினர் சந்திரா ஆகியோரை தாக்கினர். இதில் பலத்த காயம்அடைந்த கணேசன் மற்றும் மீனாட்சி இருவரையும் திருத்துறைபூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கணேசன் முத்துபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயரத்தினம், ராஜா, பாலமுருகன், ஜெயபால் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.


No comments:
Post a Comment