முத்துப்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, August 22

முத்துப்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல்.


ஆகஸ்ட் 22: முத்துப்பேட்டை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய செயலாளர் முருகையன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்திற்கு கோட்ட சிறுபட்டாக்கரையை சேர்ந்த திலிப் என்பவரும் வந்து இருந்தார். அவருக்கும் முத்துப்பேட்டையை சேர்ந்த விவசாயி முத்துவேலுக்கும் நில சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்தது.

கூட்டத்திற்கு வந்து இருந்த திலிப்பை வெளியே வருமாறு முத்துவேல் அழைத்தார். அப்போது ஒன்றிய செயலாளர் முருகையன் கூட்டம் முடிந்ததும் அவர் வருவார் என கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்துவேல் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையனை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவேலை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here