முத்துப்பேட்டை காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, August 25

முத்துப்பேட்டை காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்.


ஆகஸ்ட் 25: முத்துப்பேட்டை அருகே வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (45). இவருக்கும் முத்துப்பேட்டை மருதங்காவெளியை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் மகேஷ் (35) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன் இளங்கோ தான் கொடுத்த கடனை மகேஷிடம் திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இளங்கோவை தாக்கி உள்ளனர். இதனை இளங்கோவின் அண்ணன் மகன் செல்வகுமார் (30). தட்டிக் கேட்டு உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் மற்றும் 7 பேர் அரிவாள் மற் றும் ஆயுதங்களுடன் கடந்த வாரம் செல்வகுமாரை கொலை செய்யும் நோக்கில் செம்படவன்காட்டிலுள்ள செல்வகுமாரின் தந்தை சண்முகசுந்தரம் கடைக்கு சென்றுள்ளனர். அங்கு கடையிலிருந்த செல்வகுமாரின் தம்பி பொன்ராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். காயமடைந்த பொன்ராஜ் (29) மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பொன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் பா.ஜ.க பிரமுகர் மகேஷ் மற்றும் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஒரு வாரம் ஆகியும் அவர்களை கைது செய்யாததால் ஆத்திரமடைந்த செம்படவன்காடு கிராம மக்கள் நூற்றுக்கணக்கா னோர் நேற்று காலை காவல் துறையை கண்டித்து சாலை மறியல் செய்ய பெருமாள்கோவில் அருகே திரண்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி, சப்இன்ஸ்பெக்டர் சாமிநாதன் ஆகியோர் வந்து சாலை மறியல் செய்ய முயன்ற கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் இன்னும் இரண்டு தினங்களில் பா.ஜ.க பிரமுகர் மகேஷ் உள்ளிட்டவர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here