முத்துப்பேட்டையில் பட்ட பகலில் பெண் தீ குளித்து மரணம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 27

முத்துப்பேட்டையில் பட்ட பகலில் பெண் தீ குளித்து மரணம்.


ஜுலை 27: முத்துப்பேட்டையில் பட்ட பகலில் பெண் தீ குளித்து மரணம்.
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை அம்பட்டாங்கொல்லை பகுதியில் உள்ள கந்தபரிச்சான் ஆற்றில் கரை ஓரம் நேற்று காலை பட்ட பகலில் ஒரு பெண் உடம்பில் மண்ணனையை ஊற்றி தீ வைத்த கொண்டு எரிந்த நிலையில் சத்தம் போட்டார். இதனை கண்ட பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்து நின்றனர். சற்று நேரத்தில் உடம்பில் பற்றிய தீ எரிந்து நிலையில் கீழே அந்த பெண் விழுந்தார். 
பின்னர் பொதுமக்கள் மணல்களை அள்ளி வீசி தீயை அணைத்தனர். அதற்குள் அந்த பெண்ணும் தீயில் கருகி இறந்து போனார். உடன் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் சென்று விசாரனை நடத்தினார்கள். இதில் அதே பகுதியை சேர்ந்த சாம்பசிவம் என்பவரது மனைவி சரோஜா(65) என்று தெரியவந்தது. மேலும் சரோஜா சில வருடங்களாக மன நலம் பாதிக்கப்பட்டு கோவில், தர்ஹா போன்றவைகளுக்கு சென்றும் குணம் ஆகாமல் வீட்டில் இருந்த அவர் நேற்று பகல் மண்ணனை கேன் மற்றும் தீ பெட்டியை எடுத்து சென்றும் கந்தப்பரிச்சான் ஆற்று திடலில் நின்று தீ வைத்து கொண்டதாக விசாரணையில் தெரிந்தது. 
இது குறித்து சரோஜாவின் உறவினர் சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்துப்பேட்டை போலீசார் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர். இச்சம்பவம் முத்துப்பேட்டை பரபரப்பை ஏற்படுத்தியது.

படம் செய்தி:
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கந்தபரிச்சான் ஆற்று கரையில் எரிந்த நிலையில் காணப்படும் சரோஜாவின் உடல்.

தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை 
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here