ஜுலை 27: முத்துப்பேட்டையில் வங்கி வாசலில் 4.20லட்சம் பணம் கொள்ள அடிக்க முயற்சி..
முத்துப்பேட்டையில் சமீப காலமாக வங்கி வாசல்களில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டு வந்தனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை புதுத்தெருவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நேற்று காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை வீரன்வயல் கிராமத்தை சேர்ந்த வேதையன் மகன் நெடுஞ்செழியன் என்பவர் 4.20ரூபாய் லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கி வாசலுக்கு வந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், நெடுஞ்செழியனிடம் நைசாக பேச்சி கொடுத்து கையில் இருந்த பணத்தை பிடிங்கி உள்ளனர், சுதாரித்துக்கொண்ட நெடுஞ்செழியன், பணத்தை விடாமல் சத்தம் போட்டார் இதனால் மர்ம நபர்கள் விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளர் ரகுநாதன் கூறுகையில்.. நெடுஞ்செழியன் 4.20லட்சம் பணம் வங்கியில் எடுத்து சென்றார். வங்கியின் சற்று தூரத்தில் நடந்த சம்பவம் என்பதால் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகவில்லை, நெடுஞ்செழியன் விருப்பம் பட்டால் வங்கி உள்புறத்தில் உள்ள கேமராவின் பதிவை காட்ட தயாராக உள்ளேன் என்றார். இந்த நிலையில் தொடர் இதுபோன்ற சம்பவத்தால் முத்துப்பேட்டை பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை


No comments:
Post a Comment