துபாயில் நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் நைஜீரிய இளைஞர் சாதனை ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 19

துபாயில் நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் நைஜீரிய இளைஞர் சாதனை !




ஜுலை 19: துபாயில் ரமலான் மாதத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டி 18வது ஆண்டாக கடந்த ஜூன் மாதம் 29 முதல் நடைபெற்றது. இதில் ஆப்பிரிக்க நாடுகள், சவூதி, கத்தார், பங்களதேஷ், ஏமன், யூகே, புருனை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 87 நாடுகளைச் சார்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த சில வாரங்களாக் தினமும் இரவில் நடைபெற்ற வந்து போட்டிகளின் முடிவுகள் நேற்று இரவு அமீரக அமைச்சர்கள், ஷேக்குகள், அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதில் நைஜீரியா நாட்டை சேர்ந்த சுலைமான் அப்துல் கரீம் ஈஷா முதல் பரிசை பெற்றார். அவர் 250,000 திர்ஹமை பரிசுத் தொகையாக பெற்றார். இரண்டாம் இடத்தை சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த ஒமர் ஹுசைன் பெய்ஷா, 200,000 திர்ஹம் பரிசையும், ஏமன் நாட்டை சேர்ந்த முஹம்மது காலித் யாசின் மூன்றாம் பரிசாக 150,000 திர்ஹம் பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமீரக அமைச்சர்கள், ஷேக்குகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துகளை பரிமாறிகொண்டனர்.

முதல் பரிசு பெற்ற நைஜீரியா நாட்டை சேர்ந்த சுலைமான் அப்துல் கரீம் ஈஷா

தகவல்: அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here