இங்கிலாந்தில் பர்தா அணிந்த பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 21

இங்கிலாந்தில் பர்தா அணிந்த பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை!



ஜுன் 21: இங்கிலாந்தில் பர்தா அணிந்த பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தில் கொல்செஸ்டர் நகரில் நகித் அல்மெனியா (31) என்ற பர்தா அணிந்த பெண்ணை 16 முறை கத்தியால் குத்திய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. Ph.d பட்டப்படிப்பு படித்து வரும் அல்மெனியா, முஸ்லிம் பாரம்பரிய ஆடை அணிந்ததால் தான் தாக்கப்பட்டுள்ளார் என்று போலிசார் சந்தேகிக்கப்படுகின்றனர்.

மேலும் இந்த கொலையில் 52 வயது நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்செஸ்டர் நகரில் மார்ச் மாதம் இது போன்று மற்ற ஒரு நபர் கத்தியால் 100 முறை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து போலிசார் பொது மக்களை பாதுகாப்புடன் இருக்கும்படியும், பொது இடங்களுக்கு தனியாக வரவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர். மேலும் அம்மெனியா கொலை செய்வதற்கு சற்றுமுன் அந்த தெருவில் நடந்து சென்ற காணொளி அங்குள்ள கடையின் பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

தற்போது போலிசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் கொலை நடந்த இடத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல்: இன்று ஒரு தகவல் 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here