ஜுன் 30: முத்துப்பேட்டையில் கீழே விழுந்து கேட்பாரற்று கிடக்கும் காப்பீட்டு திட்ட போர்டை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தின் புதிய கட்டிடத்தை கடந்த ஆண்டு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள மன்னார்குடி சாலை ரயில்வே கேட் அருகே தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் குறித்த விளம்பர போர்டு ஒன்று இரும்பு பைப்புகளை கொண்டு அமைக்கப்பட்டது. இந் நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட காற்றுடன் கூடிய மழையின் போது இந்த போர்டு பெயர்ந்து விழுந்தது. அப்போது முதல் இன்று வரை அந்த போர்டு கீழே விழுந்து கேட்பாரற்று கிடக்கிறது.
தினமும் இப்பகுதி வழியாக அடிக்கடி செல்லும் அதிகாரிகளும் ஆளுங்கட்சி பிரமுகர்களும் கண்டு கொள்ளாத நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதனை சீரமைக்கவில்லை. எனவே சுகாதார துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த விளம்பர போர்டை சரி செய்து அதே இடத்தில் அமைக்க வேண்டும் என்று இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல்: தினகரன்


No comments:
Post a Comment