ஜுன் 30: முத்துப்பேட்டை அடுத்த பாலாவை கிராமத்தில் நேற்று மாலை மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் காத்தமுத்து(55), காத்தலிங்கம்(52), நாகரத்தினம்(35), மீனாட்சி(48), நாகம்மாள்(62), குணசேகரன்(40), பாப்பா(62), மாரியப்பன்(50) ஆகியோரின் 8 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் ஆகின.
இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். சம்பவ இடத்திற்கு மன்னார்குடி ஆர்.டி.ஓ.சுப்பு, வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீராம், ஆர்.ஐ சந்தரமோகன், வி.ஏ.ஓவினர் வேளம்மாள், மாரியம்மாள் மற்றும் முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள நொச்சியூர் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இது குறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்


No comments:
Post a Comment