மார்ச் 01: தாடியை மழித்தால் தான் ஹால் டிக்கட்: மாணவரை நிர்பந்தித்த கல்லூரி முதல்வர் மீது "எப் ஐ ஆர்" பதிவு !
தாடியை மழித்தால் தான் பரீட்சை எழுதுவதற்கான ஹால் டிக்கட் வழங்க முடியும்,என முஸ்லிம் மாணவரை நிர்பந்தித்த 'மொராதாபாத்' நகரின் 'வில்சோனியா' கல்லூரி முதல்வர் சாந்தா ராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாதின் பிரபல கல்வி நிறுவனமான 'வில்சோனியா' கல்லூரியின் முதல்வர், பாசித் அலி கான் என்ற முஸ்லிம் மாணவரை தாடியை மழிக்க நிர்பந்தித்துள்ளார். பிப்ரவரி 25ல் தொடங்கிய 12ம் வகுப்புக்கான தேர்வு எழுத வந்த மாணவர் பாசித் அலி கானுக்கு தாடியை காரணம் காட்டி ஹல்ல டிக்கட் மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடும் போராட்டத்துக்குப்பின், மாவட்ட நிர்வாகத்தின் தலையீட்டின் பேரில், மாணவர் பாசித் அலி, தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, பாசித் அலி காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் சாந்தாராம் மீது "எப் ஐ ஆர்" பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல்: அஹமது பைசல் (ஹசனி)


No comments:
Post a Comment