இந்தியாவில் விரைவில் இ-பாஸ்போர்ட் அறிமுகம்! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 9

இந்தியாவில் விரைவில் இ-பாஸ்போர்ட் அறிமுகம்!


பிப்ரவரி 09:இந்தியாவில் இ-பாஸ்போர்ட் முறை நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டுப் பயணம் இன்னும் எளிதாகும் என தெரிகிறது.
பாஸ்போர்ட் பெற்றவர்களைப் பற்றிய தகவல்களைப் பாதுகாப்பதற்காகவும்,போலி பாஸ்போர்ட் பயன்பாட்டை தடை செய்வதற்காகவும் அடுத்த ஆண்டு முதல் எலக்ட்ரானிக் பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், பயணியைப் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய எலக்ட்ரானிக் சிப் கொண்ட பிளாஸ்டிக் வடிவ பாஸ்போர்ட், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பாஸ்போர்ட்க்கு பதிலாக வழங்கப்படும் எனவும் மூத்த பாஸ்போர்ட் அதிகாரி முக்தேஷ் கே பர்தேஷி தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2013ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 85லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த இ-பாஸ்போர்ட் முறையின் மூலம் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மிகவும் நல்லது.

    Do u want EARN 1500$ PM.....
    JOIN FREE....TRY ONCE....PAID EVERY TIME..... HURRY UP!!!
    http://getmonthlypay.com/index.php?invite=485043

    ReplyDelete

Post Bottom Ad

Responsive Ads Here