
பிப்ரவரி 09: சவுதி அரேபியாவின் மதீனாவில் மஸ்ஜிதுன் நபவிக்கு அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று திடீர் என தீ பிடித்தது.
புனித உம்ரா பயணத்துக்காக வந்த சுமார் 700 பேர் தங்கியிருந்த இந்த ஹோட்டலில் எதிர்பாராத விதமாக தீ பிடித்ததில் எகிப்து நாட்டை சேர்ந்த 15 பேர் பலியாகினர். 130 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.






No comments:
Post a Comment