பிப்ரவரி 18: ராஜ்யசபா எம்பியாக சச்சின் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கூட செலவு செய்ய நடவடிக்கை எடுக்காமல் ரூ. 10 கோடியை வீணடித்துள்ளது ராஜ்யசபா இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்தில் கடைசி கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா நியமன எம்பியாக, மொத்தம் 11பேர் நியமிக்கப்பட்டனர்.
இதில் 11வது எம்பியாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் (41), கடந்த 2012ம் ஆண்டு யூன் மாதம் பதவியேற்றார்.
பாராளுமன்றத்தில் இரு சபைகளிலும் உள்ள எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஆண்டு தோறும் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூலம் எம்பிக்கள் தங்களது தொகுதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்வர்.
கடந்த 2012ம் ஆண்டு எம்பியாக தெரிவான சச்சின் இதுவரை நடந்த பாராளுமன்ற கூட்டங்களில் ஓரிருமுறை கலந்துகொண்டார். ஆனால் ஒரு கேள்விகூட கேட்டதில்லை, எம்பிஎன்ற முறையில் விவாதம் நடத்தவில்லை.
இது தொடர்பாக ராஜ்யசபா இணையதளத்தில் இதுவரை எம்பியாக சச்சின் பங்கேற்றது குறித்த தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
அதில் எம்பியாக இதுவரை அவர் ஒரு கேள்வி கேட்டதில் சபை குறிப்புகளில் இல்லை. மும்பை புறநகர் பகுதியில் சச்சினின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சிக்காக இதுவரை ரூ. 10 கோடி நிதிஒதுக்கப்பட்டிருந்தது.
இதனை உரிய முறையில் செலவிட சச்சின் முயற்சியோ, நடவடிக்கையே மேற்கொள்ளவில்லை.இதனால் இரண்டு ஆண்டுகளி்ல் ரூ. 10 கோடி நிதி அப்படியே உள்ளது. மொத்தம் 9 பிரிவுகளில் இவரது செயல்பாடுகள் பூஜ்யம் என்றே உள்ளது என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரைப் போன்றே நடிகை ரேகா, பாடலாசியர் ஜாவியத்அக்தர் உள்ளிட்டோர் ராஜ்யசபா நியமன எம்பியாக பதவியேற்ற நாள் முதல் பாரளுமன்றத்தில் கேள்வி எதுவும் கேட்கவில்லை. விவாதமும் நடத்தவில்லை. மேலும் தொகுதி மேம்பாட்டு நிதி கேட்டு அரசிடம் வலியுறுத்தவில்லை.


No comments:
Post a Comment